இன்றைய ராசி பலன் – 16-07-2020

rasi palan - 16-7-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டு. எடுத்த காரியங்களில் எடுத்தாலும் தடை தாமதத்திற்கு பிறகு வெற்றி கிடைக்கும். பொன் பொருள் ஆபரண சேர்க்கை உண்டாகும். வாகன வகையில் சில தொந்தரவுகள் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு எதிர்பாராத தனவரவு ஏற்பட்டு மன மகிழ்ச்சியை தரும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஒற்றுமையுடன் இணக்கமாக நடந்து கொள்வது நன்மை தரும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பிள்ளைகளால் மனமகிழும் நிகழ்வுகள் நடக்கும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. குடும்பத்தில் இருக்கும் மூத்த நபர்களிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர்களின் மனநிலையை புரிந்து கொள்ளும் நீங்கள் பல விஷயங்களில் இருந்து பாடம் கற்று கொள்ள நேரிடும்.

கடகம்

- Advertisement -

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு எத்தகைய வாய்ப்பையும் எளிதில் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்களும் சூழ்நிலையும் அமையும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பதால் சிரமம் ஏற்படலாம்.

சிம்மம்

- Advertisement -

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்குத் தேவையற்ற அலைச்சல்களும் பயணங்களும் ஏற்படக்கூடிய நாளாக இருக்கும்.உடல் உபாதைகள் சில ஏற்படுவதற்குரிய சாத்தியக்கூறுகள் உண்டு. எனவே கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பிரச்சனையே வாழ்க்கையாக இருந்து வந்த நிலை மாறக் கூடும். புதிய வாழ்க்கையை தொடங்குவதற்கான அத்தியாயம் துவங்க இருக்கிறது. பிள்ளைகளால் உள்ளம் மகிழும் நிகழ்வுகள் நடை பெறலாம். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்கு போராடுவீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு எதிலும் நிதானத்தை கடைப் பிடிக்கக் கூடிய அவசியம் ஏற்படக்கூடும்.வெற்றி வாய்ப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு ஒரு சிலர் போராட வேண்டி இருக்கலாம்.குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்வது நன்மை தரும். ஆடம்பரத்தை குறைத்துக் கொள்வது நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு புதிய பயணங்களை மேற் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும் என்பதால் தாராளமாக மேற்கொள்ளலாம். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். பொன் பொருள் சேர்வதற்கு உரிய வாய்ப்புகள் உண்டு.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு புதிய உத்வேகம் தரக்கூடிய இனிய நாளாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பெரிய தொகை ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் உடன் பணி புரிபவர்களை மரியாதையுடன் நடத்துவது நல்லது. பத்திரிக்கை துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு ஏற்றத்தை தரக்கூடிய சிறப்பான அமைப்பாக இருப்பதால் தொட்டதெல்லாம் துலங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும்.கணவன் மனைவியிடையே சிறுசிறு மனசஞ்சலங்கள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டு. வெள்ளிதோறும் அம்பிகையைத் துதித்து வாருங்கள் நன்மைகள் நடைபெறும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் சிறப்பாக இருக்கும். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய தைரியம் உங்களுக்கு இருக்கும். மனதிற்கு பிடித்தவர்களை மூலம் மன மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் வரலாம். பூர்வீக சொத்து விஷயத்தில் லாபம் உண்டாகும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு எதிர்பாராத விதமாக பணவரவு ஏற்பட்டு குடும்பத்தில் சுபிட்சத்தை தரும். பொன் பொருள் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு பதவி உயர்வு போன்றவை கிடைக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -