இன்றைய ராசி பலன் – 16-08-2020

rasi palan - 16-8-2020
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அலைச்சல் மிகுந்த நாளாக அமையும். திடீர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். பழைய பாக்கிகள் வசூலாகும். நண்பர்கள் பிரச்சனை முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. உங்கள் ராசிக்கு சுக்ர பகவானை வழிபட்டு வர நன்மை உண்டாகும்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சோர்வு மிகுந்த நாளாக காணப்படும். முகத்தில் சற்று தொய்வு ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புது நட்புகள் கிடைக்கும். எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. கால பைரவரை வணங்கி வர ஆரோக்கியம் அதிகரிக்கும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று மந்தமாக காண்பீர்கள். மற்றவர்களிடம் அளவாக பேசுவது நல்லது. பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். உடல்நலத்தில் அக்கறை தேவை. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது நன்மை தரும். விநாயகரை வழிபட்டு வர வீட்டில் மகிழ்ச்சி பெருகும்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புது புது முடிவுகள் எடுக்கவும் அதில் பயனடையவும் வாய்ப்புகள் உள்ளன. பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி அடைவீர்கள். பழைய உறவுகள் திரும்பி வரும். காலபைரவரை வழிபட்டு வர தொழிலில் முன்னேற்றம் அடையும். நெடு நாட்கள் நீடித்த கடன் தொல்லை நீங்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்புமிக்க நாளாக அமையும். எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். ஆன்மிக பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு. உஷ்ணம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் நிலவும். அம்மனை வழிபட்டு வர பண பிரச்சனை விலகும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புத்துணர்ச்சி நிறைந்த நாளாக அமையும். நற்செய்திகள் கிடைக்கக் கூடிய நாளாக அமையும். உடன் பிறந்தவர்கள் வகையில் ஆதாயம் கிடைக்கும். தொழில் புரிவோருக்கு பணவரவு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சிவனை வழிபட்டு வர செல்வ அனுகூலம் காண்பீர்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அலைச்சல் மிகுந்த நாளாக அமையும். குடும்பத்தினரிடையே அனுசரித்துப் போவது நன்மை தரும். சுயதொழில் செய்வோர் புதிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். பூர்வீக சொத்துக்கள் வந்து சேரும். நவக்கிரக வழிபாடு தொழிலில் முன்னேற்றம் காணப்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பயணங்கள் மேற்கொள்வதால் உடல் அலைச்சல் ஏற்படும். உடன் பணியாற்றுபவர்கள் இடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். தந்தை வழியில் ஆதாயம் கிடைக்கும். உடல் நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. துர்கை அம்மனை வழிபட்டு வர மன சஞ்சலங்கள் அகலும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தந்தை வழியில் ஆதாயம் காண்பீர்கள். பிள்ளைகளிடையே அக்கறை காட்டுவது நல்லது. எதிலும் நிதானத்துடன் செயல்படுவது வெற்றிக்கு கைகொடுக்கும். சனி பகவானை வழிபட்டு வர நல்ல பலனை தரும். பணவரவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு நன்மைகள் நடைபெறக்கூடிய இனிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை காரணமாக கூடுதல் அலைச்சல் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு வாய்க்கும். அம்பிகையை வழிபடுவது நல்லது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மன சஞ்சலங்கள் நிறைந்த நாளாக அமையும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். கடன்கள் பெறுவதற்கு வாய்ப்பு வந்தது. பிறரிடம் அனுசரித்துப் போவது வீண் பிரச்சினைகளை தவிர்க்கவும். புது நட்புக்கள் உருவாகும். விநாயகர் வழிபாடு மன அமைதி கொடுக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புது விஷயங்களை செய்யக் கூடிய நல்ல நாளாக அமையும். கணவன் மனைவிக்கு இடையே நல்ல ஒற்றுமை ஏற்படும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. முருகப் பெருமானை வழிபட்டு வர மனக்குழப்பங்கள் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -