இன்றைய ராசி பலன் – 16-12-2020

rasi palan - 16-12-2020

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வேலை தேடி வெளியூர் செல்லும் முயற்சிகளில் நல்ல தகவல்கள் கிடைக்கும். உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் மாற்றங்களை சந்திக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் நண்பர்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் அத்தனை முயற்சிகளும் சுபமாக கூடிய வாய்ப்புகள் உண்டு. திருமண வரன்கள் கைகூடி வரும். பிள்ளை இல்லை இல்லை என்று ஏங்கிய தம்பதிகளுக்கு நல்ல செய்தி வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை தான் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும்.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் தேவையில்லாத மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால் பொறுமையை கடைபிடிப்பது உத்தமம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு உடல் நலம் சீராக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே வார்த்தைகளில் நிதானம் தேவை. இல்லை என்றால் மன அமைதியை இழப்பீர்கள்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுய தொழில் புரிபவர்களுக்கு சிறப்பான லாபம் கிடைக்கக்கூடிய யோகம் உண்டு. பெண்களுக்கு மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் மற்றவர்களிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஸ்ட பலன்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மற்றவர்களை பற்றிய பொறாமை குணம் உங்களுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியாளர்கள் மூலம் நன்மைகள் நடைபெறும். குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும் யோகமுண்டு.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த பணவரவு சிறப்பாக இருக்கும். இதுவரையில் நிலுவையில் இருந்த கடன் தொகைகள் வசூலாகும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் இருப்பவர்களுக்கு அனுகூல பலன் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் மூலம் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். அவர்களுடன் இணக்கமாக செல்வது நல்லது. தொழில் ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இறை வழிபாடுகளில் ஆர்வம் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. சமூகத்தின் மீதான உங்களுடைய அக்கறை மேம்பட்டு இருக்கும். குடும்பத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். சுய தொழிலில் சிறப்பான லாபம் உண்டாகும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதியான சூழ் நிலை நிலவும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி பரஸ்பர அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளால் சில நன்மைகள் நடைபெறும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டு.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகம் தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. ஒருசிலருக்கு திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். பழைய நண்பர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகள் அமையலாம். குடும்பத்தில் பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பயணங்கள் மூலம் அனுகூல பலன்கள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய புதிய சிந்தனையை மேம்படுத்திக் கொள்வீர்கள்.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பேச்சில் நிதானமும் பொறுமையும் அவசியம். வார்த்தைகளில் தெளிவு மற்றும் உண்மை இல்லாவிட்டால் சில அவமானங்களை சந்திக்க நேரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய நண்பர்களுடன் பழகுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும் முன்னேற்றம் நீடிக்கும்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. உறவினர்களிடம் இருந்து அனுகூல பலன்கள் உருவாகும். பழைய கடன்கள் அனைத்தும் நீங்கி விடக்கூடிய வழிகள் பிறக்கும். உங்களுடைய முயற்சிக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்கள் உடல் சோர்வினால் ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரலாம் என்பதால் எச்சரிக்கை தேவை.

strong>மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் மகிழ்ச்சியும், தெம்பும் அதிகரிக்கும். உங்களுக்கு இருந்து வந்த கடன் தொகைகள் படிப்படியாக குறையும் வாய்ப்புகள் உண்டு. நீண்டநாள் கவலைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியான நாளாக அமையக்கூடிய வாய்ப்பு உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும் என்றாலும் உங்களுடைய பணிகளை சிறப்பாக செய்து விடுவீர்கள். மேல் அதிகாரிகளின் பாராட்டையும் பெறுவீர்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.