இன்றைய ராசி பலன் – 16-2-2021

rasi palan - 16-2-2021

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை அடையக்கூடிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் பாக்கிகள் வசூலாகும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு தொலைதூரத்தில் இருந்து சில செய்திகள் கிடைக்கப் பெறும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசயங்களில் எச்சரிக்கை தேவை. உடன் இருப்பவர்களே உங்களை ஏமாற்ற கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மந்தமான நிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய புதிய முயற்சிகளில் அதிக லாபம் கிடைக்கும்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தோல்விகளை தாங்க கூடிய மன வலிமை பிறக்கும். உங்களை மட்டம் தட்டியவர்கள் முன் மீண்டும் நீங்கள் யார் என்பதை தெரிவிக்க முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் மட்டும் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவராக எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவ அனுசரித்து செல்வது நல்லது.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவனச் சிதைவு ஏற்பட வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கை தேவை. மனதில் ஏற்படும் குழப்பங்கள் நீங்கி மன அமைதி அடைய தியானம் மேற்கொள்ளலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் கூடுதல் அக்கறை ஏற்படும். பூர்விக சொத்துக்கள் அனுகூல பலன் தரும்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கப் பெறுவதால் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். மூலாதாரத்தில் இருக்கும் ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளித்து முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அமைதி கிடைக்க தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளிலும் காலதாமதம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய நேர்மையும், நீதியும் சோதனைக்கு உட்படுத்தப்படும். காலம் கடந்து நின்றாலும் உங்களுடைய விடாமுயற்சிக்கு உரிய பலன்கள் கிடைக்கப்பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த மந்த நிலை நீங்கி புத்துணர்வு பெரும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி பரஸ்பர ஒற்றுமை அதிகரிக்கும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பலம் எது என்பதை தெரிந்து செயல்பட முயற்சி செய்வீர்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் தேவையில்லாமல் மன சஞ்சலத்தை ஏற்படுத்துவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. ஆரோக்கிய ரீதியாக பிரச்சனைகளை சமாளிக்க உணவு கட்டுப்பாடும் மேற்கொள்வது நல்லது.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை சரியாக செய்து முடிக்கப் போராடுவீர்கள். சகோதர சகோதரிகள் வழியில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களை மதித்து நடந்தால் தான் நல்லது நடக்கும். கணவன் மனைவியிடையே இருக்கும் இணக்கம் கூடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலை பளு அதிகரிக்கும் சாத்தியக் கூறுகள் உண்டு.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முடிவுகளில் உங்களுக்கே குழப்பமான மனநிலை காணப்படலாம். தகுதியான நபர்களிடம் ஆலோசனை பெற்று முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த நெருக்கம் குறைவது வாய்ப்புகள் உண்டு.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பாராத விதத்தில் மனம் மகிழும் படியான நிகழ்வுகள் நடைபெறலாம். நீண்டநாள் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை நீங்கி லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் தேவை என்பதால் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. பிள்ளைகள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இறை அருள் கிடைக்க முயற்சி செய்வீர்கள். உங்களுடன் இருப்பவர்கள் உங்களை ஏமாற்றுவதற்கான வாய்ப்பு கள் அதிகம் என்பதால் பண ரீதியான விஷயத்துக்கு எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். ஒருவரை ஒருவர் சரியான சூழ்நிலையில் மனம் விட்டு பேசிக் கொள்வது நல்லது. செய்தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய பொருள் சேர்க்கை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் ஏற்றம் காணலாம். அசையும் மற்றும் அசையா சொத்துகள் வாங்கக்கூடிய விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த முன்னேற்றம் சீராக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகள் பலன் தரும் வகையில் அமையும்.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்