இன்றைய ராசி பலன் – 16-4-2020

rasi palan - 16-4-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் வேலையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிக சிறப்பானதாக செல்லக்கூடும். இன்று நீங்கள் மந்தமாக உணரலாம். மன அழுத்தம் உங்கள் தூக்கத்தை பாதிக்கும். மாலையில் சில இடங்களில் இருந்து உங்களுக்கு வரவேண்டிய பணம் வந்துசேரும். இனம் புரியாத சில பயணம் உங்களை வருத்தம் தரக்கூடும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செய்யும் செயலை செய்வதில் கவனம் தேவை. பொறுப்புடன் எதையும் அணுகுவதால் வெற்றி கிடைக்கும்.பணிச்சுமை கூடுதலாக இருக்கும் என்பதால் வேலையை திட்டமிட்டு கொள்வது அவசியம்.வாய்ப்புகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொள்வது அவசியம். வியாபாரத்தில் லாபம் வழக்கம்போலவே இருக்கும்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செலவுகள் அதிகரிக்கும் நாளாக அமையும். நீங்கள் குடும்ப விஷயங்களில் மும்முரமாக இருப்பீர்கள். விட்டுக்கொடுத்து செல்லாவிட்டால் அதற்கான விலையை கொடுக்க வேண்டி வரலாம். வியாபாரத்தில் முதலீடு செய்வதற்கு முன் ஆலோசித்து முடிவு எடுப்பது அவசியம்.குடும்ப உறுப்பினர்களிடம் எந்த விஷயங்களில் விவாதங்களை தவிர்க்க வேண்டும்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிக்கலான சூழ்நிலைகள் இப்போது உங்கள் கட்டுப்பாட்டில் வரும். மாணவர்கள் தங்கள் பாடத்தை திட்டமிட்டு படிப்பார்கள். அதிக வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். செலவு மற்றும் வருவாயில் நீங்கள் சரியான சமநிலையை கடைபிடிக்க வேண்டும். இன்று உங்கள் நிதி நிலைமை அதிகரிக்கக்கூடும்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குழந்தைகளுடன் வீட்டில் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட வாய்ப்பு உள்ளது. சமூகத்தில் உங்கள் மீதான மதிப்பு உயரும்.வீடு அல்லது அலுவலகத்திற்கு சில தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ராணுவம் மேலாண்மை மின்னணுவியல் மருத்துவம் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு மிக சிறப்பான பலன் கிடைக்கும். குழந்தைகளின் கல்வியை பொருத்தவரை சில நல்ல செய்திகளை நீங்கள் பெறமுடியும்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் நலம் சீராக இருக்கும். திருமணம் வாழ்வில் உங்கள் துணை உங்களை புரிந்து கொள்வார். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். ஒரு புதிய வருமான ஆதாயம் கிடைக்க வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பை பெறுவது கடினம். சொல் செயலில் கவனமும் பொறுமையும் தேவை. தேவையான பணம் வரவு சிறப்பாக இருக்கும். தொழிலில் மகிழ்ச்சியான அனுபவங்களை அனுபவிப்பீர்கள்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்மறை எண்ணங்கள் தோன்ற வாய்ப்பு உள்ளது. நீதி நிலைமை சற்று கவனமுடனிருப்பது நல்லது. உடல்நிலையில் கவனம் தேவை.எந்தவொரு முடிவை எடுத்தாலும் கவனம் தேவை முடிந்தால் முக்கிய முடிவுகளை எடுக்காமல் தள்ளி வைப்பது நல்லது. சிலருக்கு வயிறு சார்ந்த கோளாறு ஏற்பட கூடும். சமூகத்திலும் குடும்பத்திலும் உங்கள் மீதான மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி இருக்கும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். சேமிப்பு எண்ணம் அதிகரிக்கும். வேலையில் உங்களின் திறமையை வெளிப்படுத்தி நற்பெயர் பெறுவதோடு புதிய வாய்ப்புகளைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்பதால் உற்சாகமாக காணப்படுவீர்கள். நீதி நிலை திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அதனால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அற்புதமான நாளாக இருக்கும். பணவரவை சிறப்பாகவும் அதை பயனுள்ள வகையில் செலவழிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கக்கூடும். பணியில் நற்பெயரைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அன்பும் அரவணைப்பும் சிறப்பாக இருக்கும். தொழிலில் உங்களுக்கு பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கக்கூடும்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் சில அதிருப்திகளை சந்திக்கக்கூடும். அவசியமான செலவுகளை தவிர புதிய முதலீடுகளை செய்வதை கண்டிப்பாக தவிர்க்கவும். மாணவர்கள் தங்கள் படைப்புகளை பொறுமையுடன் படிக்க வேண்டியது அவசியம். உங்களை சுற்றியுள்ளவர்கள் உங்களிடம் ஒத்துழைப்பு தர மாட்டார்கள் எனவே பொறுமை காப்பது அவசியம்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழிலில் பொறுப்புகள் அதிகரிக்கும். இருப்பினும் புத்துணர்வுடன் வேலையை செய்து முடிப்பீர்கள்.துணையுடன் இருந்த கருத்து மோதல் நீங்கும் அன்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். நேர்மறையான எண்ணங்களால் வளர்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் பெறுவீர்கள். பணவரவு சீராகவும் குடும்பத்திற்கு தேவையான செலவை செய்வீர்கள்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனுகூலமான நாளாகும். அதிக ஆற்றலுடனும் செயல்படுவதோடு உங்கள் வேலையில் கவனம் செலுத்தி வேலையை செய்து முடிப்பீர்கள். சிலர் வேலை தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. உடன்பிறந்தவர்களிடம் இருந்து சில நல்ல செய்திகள் வரக்கூடும். உங்கள் கடின உழைப்பு காரணமாக பல வெற்றிகளைப் பெறுவீர்கள். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.