இன்றைய ராசி பலன் – 16-06-2021

rasi palan - 16-6-21
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் ஏற்றம் தரும் அமைப்பாக இருக்கிறது. எடுத்த காரியங்களில் வெற்றி காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் திடீர் லாபம் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீர்வதற்கு சந்தர்ப்பங்கள் அமையும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது நினைத்தபடி நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் எண்ணம் ஈடேறும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி காணலாம். குடும்ப விஷயங்களில் மூன்றாம் நபர்களை அனுமதிப்பதை தவிர்ப்பது உத்தமம். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் வெற்றி வாகை சூட கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஓரளவுக்கு சுமாரான பலன்கள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம். குடும்பத்தில் மூத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்க பெறும். கணவன்-மனைவி பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தடைப்பட்ட சுப காரியங்களில் வெற்றி காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் எப்போதும் மந்த நிலை மாறும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் குடைச்சல் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளித்து முன்னேறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த நஷ்டங்களை எதிர்த்து போராடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் மூலம் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் யோகம் உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவ விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. ஆரோக்கியம் மேம்பட உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது நல்லது.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எதிர்த்து போராடக்கூடிய தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும். கணவன் மனைவிக்கு இடையே நிலவும் வாக்குவாதங்கள் குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைக்கு உரிய ஊதியம் கிடைப்பதில்லை இடையூறுகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு குறையும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்யாமலிருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எந்த ஒரு முடிவையும் எடுக்கும் முன்னர் ஆலோசனை கேட்டுக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நவீன உபகரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக அமையலாம். தொழில் மற்றும் வியாபார ரீதியான வர்த்தகம் சிறப்பாக அமையும். வெளியிட போக்குவரத்துகளில் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் கவனச்சிதறல் ஏற்படும் அபாயம் இருப்பதால் எச்சரிக்கை தேவை. புதிய ஒப்பந்தங்களை தள்ளிப்போடுவது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே நடந்த பனிப்போர் நீங்கும். ஒருவரை ஒருவர் பரஸ்பர அன்புடன் நடத்துவீர்கள். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருக்கும் ஒற்றுமையை சீர்குலைக்க சிலர் முயற்சி செய்வார்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவு ஒன்று நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சாதகமற்ற அமைப்பு என்பதால் வெளியிட போக்குவரத்து தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு முடிவை எடுக்கும் முன் குடும்பத்தினரின் ஆலோசனை கேட்டு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவும் தக்க சமயத்தில் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். திருமண சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். கூட்டாளிகளின் முதலீட்டு சிறப்பாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் உடைய மனக்கோட்டை நனவாக வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியான ஏற்றம் சிறப்பாக இருக்கும் என்பதால் வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்துவிடுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் இடையூறுகள் ஏற்படலாம். தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு நல்ல காலமாக இருக்கும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த குழப்பங்கள் தீரும். ஆரோக்கிய ரீதியான விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.

- Advertisement -