இன்றைய ராசி பலன் – 17-03-2018

12-rasi

மேஷம்:
mesham

புதிய முயற்சிகளை மாலையில் தொடங்குவது நல்லது. தாய்மாமன் வழியில் வீண்செலவுகள் உண்டாகும். சிலர் அலுவலகம் பணி காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதலான லாபம் கிடைக்கும். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் உண்டாகும்.

ரிஷபம்:
rishabam
தாயின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அரசாங்கம் சார்ந்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சகோதரர்களால் சிறுசிறு பிரச்சனைகள் வந்து போகும். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் அதிகரிக்கும். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரிச்சி செல்லுங்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாகனத்தில் செல்லும் பொது கவனமாக இருங்கள்.

மிதுனம்:
Midhunam
உற்சாகமான நாள். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையை கடைபிடியுங்கள். மலையில் புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் விற்பனை இன்று சுமாராகத்தான் இருக்கும். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமான நாள்.

கடகம் :
Kadagam

அனுகூலமான நாள். புதிய முயற்சிகளை தவிர்த்து கொள்ளுங்கள். சிலர் குடும்பத்துடன் வெளியூர் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வீண்செலவுகள் உண்டாகும். பணம் கையில் இருப்பதால் அதை சமாளித்து விடுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சிறுசிறு நஷ்டங்கள் ஏற்படும். மாலையில் புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

- Advertisement -

சிம்மம்:
simam
அரசாங்கம் சார்ந்த காரியங்கள் தாமதமாகும். வாழ்க்கைத்துணைவியால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். இன்று மாலையில் முக்கிய பிரமுகர்கள் அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். பிள்ளைகளால் செலவுகள் உண்டாகும். தாய் வழியில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகளை தவிர்த்துவிடுங்கள்.

கன்னி:

அரசாங்கம் சார்ந்த காரியங்கள் சுலபமாக முடியும். இன்று மன குழப்பத்துடன் காணப்படுவீர்கள். வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள் .

இதையும் படிக்கலாமே:
பங்குனி மாத ராசி பலன் 2018

துலாம்:

இன்று பொறுமையுடன் செயல்படுங்கள். அரசாங்கம் சார்ந்த காரியங்களில் அவசரம் வேண்டாம். புதிய முயற்சிகளை தவிர்த்து விடுங்கள். பிள்ளைகளால் பிரச்சனைகள் ஏற்படும். மாலையில் பள்ளி ,கல்லூரி நண்பர்களை சந்தித்து உரையாடுவீர்கள். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் உண்டாகும்.

விருச்சிகம்:

அனுகூலமான நாள். வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அலுவலகத்தில் தேவையற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். தாய்மாமன் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் குறைவாகத்தான் இருக்கும். திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

தனுசு:

சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் தாமதமாகும். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் உண்டாகும். அலுவலகம் பணிச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். பிள்ளைகளால் சிறுசிறு பிரச்சனைகள் வந்து போகும். தாய் வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.

மகரம்:
magaram
தாய்வழி உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.தாய்மாமன் வழியில் நல்ல செய்தி வந்து சேரும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேர தாமதமாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் உண்டாகும்.

கும்பம்:

சகோதரர்கள் உங்கள் உதவி தேடி வருவார்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சலசலப்பு உண்டாகும். மாலையில் முக்கிய பிரமுகர் ஒருவர் அறிமுகமாவர்.புதிய ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டாகும். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரிச்சி செல்லுங்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகளை தவிர்த்து கொள்ளுங்கள்.

மீனம்:

அனுகூலமான நாள். சகோதரர்களால் வீண்செலவுகள் உண்டாகும். பணம் கையில் இருப்பதால் அதை சமாளித்து விடுவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி தாமதமாகும். அலுவலகத்தில் பணியாளர்களால் உங்கள் பணி பாதிக்கப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கூடுதலாக இருக்கும். மாலையில் பள்ளி நண்பர்களை சந்திப்பீர்கள். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேர தாமதமாகும்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.