Rasipalan Today : இன்றைய ராசி பலன் – 17-03-2019

Rasi Palan
- Advertisement -

மேஷம்:
Mesham Rasi

சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தாயின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வரும்.

ரிஷபம்:
Rishabam Rasi

ரிஷப ராசிக்கு இன்றைய ராசி பலன் படி முயற்சிகளில் வெற்றி உண்டாகும். உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்

- Advertisement -

மிதுனம்:
midhunam

வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பாராத மகிழ்ச்சியான அனுபவங்கள் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். புதிய முயற்சிகள் எதுவும் இன்றைக்கு வேண்டாம். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணம் வாங்கும் யோகம் உண்டாகும்.

கடகம்:
Kadagam Rasi

அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். பிற்பகலுக்குமேல் தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். சிலருக்கு வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.

- Advertisement -

சிம்மம்:
simmam

மனதில் உற்சாகம் பெருகும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். உற்சாகமான நாள். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

கன்னி:
Kanni Rasi

எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக்கிடைக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi

வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். வாழ்க்கைத்துணை வழியில் மதிப்பு கூடும். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

விருச்சிகம்:
virichigam

தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வழக்கில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

தனுசு:
Dhanusu Rasi

காரியங்கள் அனுகூலமாகும்.சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. பிற்பகலுக்குமேல் உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வகையில் ஆதாயம் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிகளில் வெற்றி ஏற்படும்.

மகரம்:
Magaram rasi

எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பிற்பகலுக்கு மேல் புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம். இன்று நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கப் பெறுவீர்கள். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சிலருக்கு திடீர் பயணங்கள் ஏற்படக்கூடும். சகோதரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பார்கள். புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். சதயம் பிறந்தவர்களுக்கு நீண்டநாள்களாக எதிர்பார்த்த சுபச்செய்தி வந்து சேரும்.

மீனம்:
meenam

முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். புதிய முயற்சிகள் எதுவும் இன்றைக்கு வேண்டாம். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். இன்று முயற்சிகளில் வெற்றி உண்டாகும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -