இன்றைய ராசி பலன் – 17-09-2020

rasi palan - 17-9-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்த காரியத்தை செய்வதில் ஏதாவது ஒரு தடங்கல்கள் இருந்து கொண்டே இருக்கும். நீங்கள் நினைத்த விஷயங்கள் நினைத்த நேரத்தில் சரியாக முடிக்க முடியாமல் போகலாம். கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை குறைவதற்கு நீங்கள் வாய்ப்புகளை கொடுக்காமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப்பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அமைதியான சூழ்நிலை காணப்படும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான அமைப்பு என்பதால் எதையும் சுலபமாக செய்து காட்டி விடுவீர்கள். கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளை அதிக கவனத்துடன் செய்வது நல்லது. உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கப்பெறும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் படிப்படியாக சீராகி வரும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்வுகள் நடைபெறுவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு. இன்னல்களை தீர்க்கும் விநாயகரை வழிபடுவது நல்லது.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வளர்ச்சி பாதையை நோக்கி செல்லக்கூடிய நாளாக அமைய இருப்பதால் மனதில் மகிழ்ச்சி இருக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ப அங்கீகாரங்கள் தக்க சமயத்தில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் அமையும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலை மாறும். கடன் பிரச்சினைகள் குறைவதற்கான சந்தர்ப்பங்கள் அமையப்பெறும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஓரளவுக்கு சுமாரான பலன்களையே தரவல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிடைக்கும். அசையும் அசையா சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் தேவையற்ற விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. வாகன ரீதியான பயணங்களில் சற்று கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவியிடையே சிறு சிறு சண்டைகள் சச்சரவுகள் தோன்றி மறையலாம். ஒருவரை ஒருவர் அனுசரித்து விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. கிருஷ்ண வழிபாடு செய்து வர மன அமைதி பிறக்கும்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையக் கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரலாம். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதமின்றி வெற்றி பெறுவதற்கு ஏற்ற நாளாக இன்று இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இதுவரை உங்களை புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் துணிச்சலுடன் செய்யக்கூடிய தன்னம்பிக்கை மிகுந்த நாளாக அமைய இருக்கிறது. உங்களின் மனோதிடம் உங்களை சுற்றி இருப்பவர்களை வியக்க செய்யும் வண்ணம் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் நீங்கிவிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் நிச்சயம் சுபீட்சமும் நிலவ உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கப்பெறும். பிள்ளைகளின் மூலம் நல்ல நிகழ்வுகள் நடைபெறும்.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த விஷயங்கள் எதிர்பார்த்த படியே கைகூடி வரக்கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு தக்க சமயத்தில் கிடைக்கும். உங்களின் முயற்சிகளுக்கு உங்களின் குடும்பத்தார் பாராட்டு தெரிவிப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரம் மூன்றாம் நபர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையேயான கருத்து வேறுபாடுகள் நீங்கள் சந்தர்ப்பங்கள் அமையும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முன்னேற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் எதிலும் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சீராக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களுடன் இணக்கமான நட்பு ஏற்படும். வெளியூர் தொடர்பான விஷயங்களில் பெண்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும் சந்தர்ப்பங்கள் அமையும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்றைய நாள் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி முன்னேற்றம் காண்பது மிகவும் நல்லது. இதைத் தான் செய்வேன் என்று அடம் பிடிக்காமல் எது கிடைத்தாலும் ஏற்றுக் கொள்வது முன்னேற்ற பாதையில் செல்ல வழிவகுக்கும். கணவன் மனைவி இடையேயான புரிதல் நன்றாக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள், குறிப்பாக மூத்தவர்கள் உங்களை தவறாக எண்ணி விட்டதாக மனம் வருந்துவார்கள். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய அமைப்பாக இருப்பதால் தேவையற்ற வாக்கு வாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வம்பு வழக்குகள் போன்றவற்றிலிருந்து தூரமாக இருப்பது மிகவும் நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் சக பணியாளர்கள் உதவியால் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு. பிள்ளைகள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடாமல் உபயோகமான விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

கும்பம்
கும்ப ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் கவலைகளை காற்றோடு காற்றாக பறக்க விடக்கூடிய அமைப்பாக இருப்பதால் நல்ல நாளாக அமையும். குடும்பத்தார் மற்றும் நண்பர்களின் ஆதரவும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு மற்றவர்களின் கவனத்தை எளிதில் ஈர்க்கக் கூடிய அமைப்பாக இருக்கிறது. உங்களின் வேடிக்கையான பேச்சு மற்றும் சாதுரியமான குணம் மற்றவர்களை உங்கள்பால் ஈர்ப்பதற்கு வசதியாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் படிப்படியாக நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும் என்பதால் தேவையான ஓய்வை முன்னரே எடுத்துக் கொள்வது நல்லது.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -