இன்றைய ராசி பலன் – 17-1-2020

rasi palan - 17-1-2020
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. புதிய சொத்துக்கள் வாங்குவது, விற்பது தொடர்பான விஷயங்களில் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. எதிர்பார்த்தபடி தனவரவு திருப்திகரமாக இருக்கும். பெற்றோர்களின் உடல் நலத்தில் அக்கறை தேவை. கணவன் மனைவியிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வழக்கு தொடர்பான விஷயங்களில் வெற்றி கிட்டும். எதிர்பாராத நபர்களால் புதிய மாற்றங்கள் ஏற்படலாம். விநாயகரை வழிபடுவது நல்லது.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உயர்கல்வி பயில்வோருக்கு நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாடு செல்வதற்கான முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். சகோதர, சகோதரிககள் வழியே ஆதாயம் உண்டு. புதிய தொழில் முயற்சிகளை செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். மாணவர்கள் கல்வியில் அக்கறை தேவை. குடும்பத்தில் அமைதி நிலவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. பைரவ வழிபாடு நன்மையை தேடித்தரும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். நண்பர்கள், உறவினர்களுடன் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள். குதூகலத்துடன் காணப்படுவீர்கள். பொருளாதார பற்றாக்குறையை சுமுகமாக சமாளிப்பீர்கள். மனதுக்கு பிடித்தவர்களால் மன மகிழ்ச்சி உண்டாகும். நீண்டநாள் எதிர்பார்த்த தனவரவு திருப்தி தரும். மாணவர்களின் கல்வி விஷயத்தில் கூடுதல் கவனம் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. நண்பர்களால் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் மூத்தவர்களின் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வாகன விஷயத்தில் கவனம் தேவை.

கடகம்:
கடக ராசிக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்களால் பிரச்சனைகள் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மாணவர்களின் கல்வியில் அக்கறை செலுத்துவது நல்லது. சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முடிவு தரும். நீங்கள் யாரிடம் பேசும்போதும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உணர்ச்சிவசப்படக் கூடிய நாளாக இருக்கும். கணவன் மனைவியிடையே சிறுசிறு பிரச்சனைகள் உண்டாகலாம். அனுசரித்து செல்வது நல்லது. வெளியிடங்களுக்கு சென்று வருவதன் மூலம் மன அமைதி கிட்டும். குடும்பத்தில் அமைதி நிலவும். மூன்றாம் நபர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. முருகப்பெருமானை வழிபடுவது நல்ல நாளாக அமைவதற்கு வழிவகுக்கும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். கணவன் மனைவியிடம் இடையே சுமுகமான உறவு நிலவும். அன்பு அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசுவதால் பல பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். குழந்தைகளின் கல்வி விஷயத்தில் எச்சரிக்கை தேவை. உயர்கல்வி பயில்வோர் கவனமாக இருப்பது நல்லது. வியாபாரம் செய்பவர்கள் புதிய யுத்தியை கையாள்வதால் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக பேசுவது நல்லது. வெளிநாடு செல்ல இருப்போர்க்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடுவது சிறந்த நாளாக அமைவதற்கு வழிவகுக்கும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். புதிய நபர்களால் குடும்பத்தில் சில பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வெளியிடங்களுக்கு சென்று வருவதன் மூலம் உற்சாகம் ஏற்படும். சமூக அக்கறையுடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் விருத்தி உண்டாகும். நீண்ட நாட்களாக நடைபெறாத சில காரியங்கள் முடிவுக்கு வரும். உங்களின் விடாமுயற்சி சிறந்த பலன்களைத் தரும். விக்னங்களை தீர்க்கும் விநாயகரை வழிபடுங்கள்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். மாணவர்களின் கல்வி முன்னேற்றம் காணப்படும். உயர்கல்வி பயில்வோர்க்கு நல்ல தகவல் வந்து சேரும். வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்போர் சக பணியாளர்களுடன் உற்சாகமாக காணப்படுவீர்கள். வெளியிடங்களுக்கு செல்வதற்கான சூழ்நிலை நிலவும். நீண்ட நாள் நண்பர் ஒருவரை சந்திக்க நேரலாம். பொருளாதாரப் பற்றாக்குறையால் அவதிப்படுவீர்கள். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். ஊதிய உயர்வு, உத்தியோக உயர்வு போன்றவை ஒருசிலருக்கு கிடைக்கப்பெறும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். நரசிம்மரை வழிபடுவது நல்லது.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. குதூகலத்துடன் காணப்படுவீர்கள். கணவன் மனைவியிடையே சிறு சிறு சண்டைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படலாம். புதிய யுக்திகளை கையாள்வதால் சிறந்த பலன்களை பெறலாம். திருமணம் போன்ற சுபகாரிய பேச்சுக்கள் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன. கூட்டுத் தொழில் புரிவோர் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. நீண்ட நாட்களாக தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமண பேச்சுகள் இனிதே சுபமாக நடைபெறும். புதிய நண்பர்கள் சேர்க்கை அனுகூலமான பலன்களை தரும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் குதூகலத்துடன் காணப்படுவீர்கள். எதிர்பாராத நபர்களால் எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. எச்சரிக்கை தேவை. வெளியிட பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது. சகோதர, சகோதரிகளிடம் அக்கறை கொள்வது நல்லது. பயணங்களால் ஆதாயம் உண்டு.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்ப நபர்களிடம் விட்டுக்கொடுத்து பேசுவது நல்லது. வீண் பிடிவாதங்களால் விபரீத விளைவுகளை சந்திக்க நேரலாம். கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. எதிர்காலத்தைப் பற்றிய திட்டமிடல் நல்ல முறையில் நடைபெறும். பூர்வீக சொத்துக்கள் பிரச்சனைகளில் வெற்றி கிட்டும். வழக்கு தொடர்பான பிரச்சனைகளில் வெற்றி கிட்டும். குழந்தைகள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. திடீர் பணவரவு உற்சாகத்தை உண்டாக்கும். நண்பர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். குழந்தைகள் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். உயர்கல்வி பயில்வோர் புதிய வாய்ப்புகளை தேடிச் செல்லலாம். எதிர்கால திட்டமிடலுடன் செயல்படுவது நல்லது. ஒரு சிலருக்கு வாகன யோகம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன. வெளியிடங்களுக்கு சென்று வருவதன் மூலம் மன இறுக்கத்தில் இருந்து விடுபடலாம். குடும்ப நபர்களை அனுசரித்து செல்வது நல்லது. சகோதர, சகோதரிகளால் ஆதாயம் கிட்டும். பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். வெளி நபர்களால் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன எனவே வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. நிதானத்தை கடைபிடிப்பது மிகவும் நன்று. புதிய தொழில் புரிவோர்களுக்கு முன்னேற்றம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. வியாபாரம் விருத்தி தரும். வெளிநாடு பயணம் ஒருசிலருக்கு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. வெளிநாடுகளில் வசிப்போர் தாய்நாடு செல்வதற்கான திட்டமிடல் வெற்றி தரும்.

- Advertisement -