இன்றைய ராசி பலன் – 17-10-2020

rasi palan - 17-10-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய சிந்தனைகள் உதிக்க கூடிய நாளாக அமையும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு சீக்கிரம் மேற்கொள்ள முற்படுவீர்கள். உத்யோகத்தில் பணிபுரிபவர்களுக்கு புதிய நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு வாடிக்கையாளர் எண்ணிக்கை உயரும். சக தொழிலாளர்கள் ஆதரவு முன்னேற்றம் தரும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத திடீர் லாபம் கிடைக்கக்கூடிய நாளாக அமையும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றத்தில் கூட்டாளிகளின் ஆதரவால் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு இதுவரை இருந்து வந்த டென்ஷன் குறையும். குடும்பத்தில் கணவன் மனைவி உறவுக்கு இடையே சிறு விரிசல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்பதால் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தைரியத்துடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பிணக்குகள் ஏற்படலாம். சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அனுபவமிக்க பணியாளர்களை ஈடுபடுத்துவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முயல்வீர்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மாற்றங்களை சந்திக்க கூடிய நாளாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் அதிக கவனமுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் கிடைக்க வேண்டிய லாபம் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படலாம். படிப்படியாக இதுவரை இருந்துவந்த கடன்கள் யாவும் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுமையை கடைபிடிப்பது மிகவும் நல்லது. நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இடையே சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வாக்குவாதங்களை தவிர்த்து அமைதி காப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மத்தியில் மதிப்பு உயரும். தொழில் ரீதியான முன்னேற்றம் ஓரளவுக்கு சாதகப் பலன் தரும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நண்பர்களுக்கு இடையே புதிய முயற்சிகள் வெற்றி தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் பணி சம்பந்தமான ரகசியங்களை காப்பதில் கவனம் இருக்கும். அதிகரிக்கக்கூடிய செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

- Advertisement -

துலாம
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல பலன்கள் கிடைக்க கூடிய அமைப்பாக இருக்கிறது. சமாளித்து வந்த பிரச்சனைகள் தீர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் தொல்லைகள் வந்து சேரலாம். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் எச்சரிக்கை தேவை.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்றார் மற்றும் உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. நிலுவையில் இருந்த கடன் தொகைகள் வசூலாகும். சிலருக்கு கடன்கள் குறையும் வாய்ப்புகள் உள்ளன. உத்யோகத்தில் புதிய பொறுப்புகளை சிறப்பாக செய்து முடித்து அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கள்ளம் கபடம் இல்லாமல் பழகும் நீங்கள் பலரின் அதிருப்திக்கு ஆளாக நேரலாம். அநாவசிய பேச்சை தவிர்ப்பது மிகவும் நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை மாறி நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் புதிய வேலைகளை கற்றுக் கொள்வீர்கள். கணவன் மனைவி இடையேயான சண்டைகள் நீங்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த அளவிற்கு தனவரவு சிறப்பாக அமைய இருக்கிறது. திடீர் பணவரவு கடன் பிரச்சனைகளை தீர்க்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான வளர்ச்சி காண்பீர்கள். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் விவகாரத்தில் எச்சரிக்கை தேவை.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காவிட்டாலும் சுமாரான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக பணியாளர்களுடன் மகிழ்ச்சியுடன் இருப்பதற்குரிய சந்தர்ப்பங்கள் அமையும். குடும்பத்திலும் உற்சாகத்திற்கு இன்றைய நாளில் குறைவிருக்காது என்றே கூறலாம்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்க நிலையை சமாளிக்க சிறிது போராட வேண்டியிருக்கும். நண்பர்களும் உறுதுணையாக இருப்பார்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு சலுகைகள் கிடைக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -