இன்றைய ராசி பலன் – 17-04-2021

rasi palan - 17-4-21

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருக்கும் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகள் குறையும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்ததை சாதிக்க கூடிய நல்ல நாளாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் யாரையும் நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைத்து அதை தவிர்ப்பது உத்தமம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத அலைச்சல் ஏற்படும். கணவன் மனைவி உறவில் நெருக்கம் உண்டாகும்.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் செய்யும் வேலைகளுக்கு உரிய ஊதியம் கிடைப்பதில்லை இடையூறுகள் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டிகளை தாண்டி செழிப்பு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத பிரச்சனைகளும், சங்கடங்களும் நேரும்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருப்பவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி காட்டுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நண்பர் களின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சமுதாயத்தின் மீது அக்கறை கூடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும். ஒற்றுமை வலுவாகும்.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய முகத்தில் பொலிவு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒருவிதமான உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். கொடுக்கப்பட்ட பணிகளை சரியாக செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய முன்கோபத்தை குறைத்துக் கொள்வதன் மூலம் முன்னேற்றத்தை காணலாம்.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத சண்டை சச்சரவுகளில் மூக்கை நுழைப்பதை தவிர்ப்பது நல்லது. புலி வால் பிடிக்க போன கதையாக மாறிவிடும். உத்யோகத்தில் இருப்பவர்கள் அமைதியைக் கடைபிடிப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கி முன்னேற்றம் காணலாம்.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற பிரச்சினைகள் நீங்கி குடும்பத்தில் அமைதி பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்கள் மீது பழி சுமத்துபவர்களை எதிர்த்து போராடுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் உடைய கனவுகள் நிறைவேறும். புதிய சொத்துக்கள் வாங்கும் பலன் உண்டு.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத திடீர் மாற்றங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கும் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்பு உடல் சோர்வை உண்டாக்கும் வகையில் அமையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கப் பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம். வாடிக்கையாளர்கள் இடத்தில் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மனதில் இடையூறுகள் ஏற்படும்.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையில்லாத செலவுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தை சீர் செய்து கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் பிரச்சினைகள் வலுவாக வாய்ப்புகள் என்பதால் நிதானம் தேவை.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆரோக்கிய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஒருசிலருக்கு புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் இடத்தில் இருந்து எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். இறை வழிபாடுகளில் கவனம் செலுத்தினால் மனஅமைதி உண்டு.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பேச்சில் நிதானமும், தெளிவும் தேவை. கணவன் மனைவிக்கு இடையேஇருக்கும் பிரச்சினைகளை மூன்றாம் நபர்களிடம் பகிர்வதை தவிர்ப்பது உத்தமம். இது வரை நிலுவையில் இருந்த கடன் தொகைகள் வசூலாகும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

English Overview:
Here we have Today Rasi Palan 17-4-2021.