இன்றைய ராசி பலன் – 17-5-2020

rasi palan - 17-5-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதன் மூலம் தோல்வியடைய வாய்ப்புகள் உள்ளது. பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மனைவியிடம் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கி அவரிடம் அன்பு செலுத்துவீர்கள். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும். வியாபாரத்தில் லாபம் வழக்கம்போலவே இருக்கும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று சோர்வாக இருக்கக்கூடும். பிள்ளைகள் மூலம் உற்சாகமும் மகிழ்ச்சியும் ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களிடம் மனஸ்தாபம் உண்டாகும். தாயின் தேவைகளை புரிந்து கொண்டு அதை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு கொடுத்த கடன் திரும்பி வருவதற்கு வாய்ப்பு உண்டு.வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் லாபம் அதிகரிக்கும்.கர்ப்பிணிப் பெண்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கக்கூடும். குடும்பத்தில் உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் வந்து நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சியால் லாபம் அதிகரிக்க கூடும். உத்தியோகத்தில் ஊழியர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். தொழிலில் பங்குதாரர்களால் உங்களுக்கு பண வரவு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.எதிர்பாராத வீண் செலவுகள் அதிகரித்தாலும் தேவையான பணம் கையில் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை. கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனை மந்தமாக இருக்கும்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மற்றவர்களிடம் பேசும்போது பொறுமையாக பேசுவது அவசியம். தாய்வழி உறவினர்களால் செலவும் அலைச்சலும் ஏற்படக்கூடும். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வியாபாரிகள் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடுவது நல்லது.பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நாள். இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உங்கள் வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பதால் வெற்றி பெறுவீர்கள். குழந்தைகளின் படிப்பில் அதிகம் அக்கறை தேவை. வாழ்க்கைத் துணை வழி உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் லாபம் வழக்கம்போலவே இருக்கும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகமான நாளாக அமைய போகிறது. எதிர்பாராத செலவுகள் அதிகரிப்பதால் சிலருக்கு கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படும். வாழ்க்கைத்துணைமூலம் மகிழ்ச்சி உண்டாகும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் சுமுகமாக முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். நண்பர்களை சந்திப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் ஊழியர்களின் கூடுதல் உழைப்பால் லாபம் அதிகரிக்கும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புகழ் அதிகரிக்கும் நாளாக அமையும். தந்தைவழி உறவினர்களிடம் எதிர்பாராத பண உதவி கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. பெற்றோர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் பேசும்போது பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. அரசாங்க உத்தியோகம் கைகூடிவரும். வியாபாரத்தில் ஊழியர்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமான நாளாகும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுங்கள். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் பொறுமையாக நடந்துகொள்வது அவசியம். வியாபாரத்தில் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது சிறிது பிரச்சினைகள் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே காணப்படும்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். குடும்பத்தில் எடுக்கும் முக்கிய முடிவுகளுக்கு உங்களின் ஆலோசனையை பெறுவார்கள். பிள்ளைகளின் பிடிவாதம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் வியாபாரிகளிடம் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வெளிநாடு செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுமையைக் கடைப்பிடித்தால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். தந்தையின் விருப்பத்தை புரிந்து கொண்டு அதை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் முக்கிய முடிவு எடுப்பதை தவிர்ப்பது நல்லது. திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பணியாளர்களுக்கான செலவுகள் செய்தாலும் விற்பனையும் லாபமும் அதிகரிக்கக்கூடும். திருமணம் தடை நீங்கி நல்ல வரன் கைகூடி. புது முயற்சியால் வெற்றி அடைவீர்கள்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செலவுகள் அதிகரிக்கும் நாளாக அமையப்போகிறது. குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கும். வியாபாரத்தில் எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும். கொடுத்த கடன் திரும்பி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உத்யோகத்தில் உங்களின் வருமானம் உயர வாய்ப்புகள் உள்ளது. பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.