Rasi palan : இன்றைய ராசி பலன் – 18-04-2019

Rasi Palan
- Advertisement -

மேஷம்:
Mesham Rasi

பிற்பகலுக்கு மேல் மனதில் உற்சாகம் ஏற்படும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளை ஏற்கவேண்டி வரும் என்றாலும் உற்சாகமாகவே ஏற்றுக்கொள்வீர்கள். இன்று செலவுகள் அதிகரிக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசால் ஆதாயம் உண்டாகும்.

ரிஷபம்:
Rishabam Rasi

வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும்.

- Advertisement -

மிதுனம்:
midhunam

வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். முயற்சிகள் சாதகமாக முடியும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். ஆனாலும், வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

கடகம்:
Kadagam Rasi

சிலருக்கு புதிய ஆடை ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். பிற்பகலுக்கு மேல் திட்டமிட்டுச் செயல்படுவது அவசியம். தாய் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக ஊழியர்களின் உதவியால் உற்சாகமாக முடிப்பீர்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.

- Advertisement -

சிம்மம்:
simmam

மனதில் உற்சாகம் பெருகும். தாய்மாமன் வகையில் ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உற்சாகமான நாள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பிள்ளைகள் வழியில் பெருமை உண்டாகும்.

கன்னி:
Kanni Rasi

கன்னி ராசிக்கு இன்றைய ராசி பலன் படி உற்சாகமான நாள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் மூலம் நன்மைகள் ஏற்படும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi

இன்று பிற்பகலுக்குள் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் நல்லபடி நிறைவேறும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிள்ளைகளால் பெருமை ஏற்படும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கலாம். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

விருச்சிகம்:
virichigam

பிற்பகலுக்குமேல் உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் நன்மை உண்டாகும்.

தனுசு:
Dhanusu Rasi

தொலைதூரத்திலிருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். குடும்பம் தொடர்பான விஷயங்களை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளால் பெருமை சேரும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

மகரம்:
Magaram rasi

எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. இன்று உற்சாகமான நாளாக இருக்கும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பிறக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

வழக்கில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிறிய அளவில் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

மீனம்:
meenam

வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். பிள்ளைகளின் செயல்கள் உங்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -