இன்றைய ராசி பலன் – 18-05-2018

12-rasigal
- Advertisement -

மேஷம்:

Mesham Rasiபிற்பகல்வரை மனதில் இனம் தெரியாத சஞ்சலம் இருந்தாலும் அடுத்தடுத்து வரும் வேலைகளின் காரணமாக அதை அவ்வளவாகப் பொருட்படுத்தமாட்டீர்கள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் அனுபவ அறிவு பெரிதும் பாராட்டப்படும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasiவழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். தாயின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.

மிதுனம்:

midhunamஉற்சாகமாகக் காணப்படுவீர்கள். நிலம், மனை வாங்கும் முயற்சி நல்லமுறையில் முடியும். தந்தை வழி உறவினர்களிடையே மதிப்பும் ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் மாமன் வகையில் நன்மை ஏற்படும்.

கடகம்:

- Advertisement -

Kadagam Rasiஉடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சியான அனுபவங்கள் ஏற்படும்.

சிம்மம்:

simmamவாழ்க்கைத் துணை வழியில் நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். அலுவலகத்தில் அதிகரிக்கும் பணிச் சுமையின் காரணமாக நேரத்துக்குச் சாப்பிடமுடியாது. வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

வைகாசி மாத ராசி பலன்களை அறிய இங்கு கிளிக் செய்யவும்

- Advertisement -

கன்னி:

Kanni Rasiஇன்று உற்சாகமாகவும் பரபரப்பாகவும் காணப்படுவீர்கள். பிற்பகல்வரை பணிச்சுமை அதிகரித்தபடி இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் சுமாராகவே கிடைக்கும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

துலாம்:

Thulam Rasiகாலையில் இருந்தே பரபரப்பாகக் காணப்படுவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கவும் நேரும் கணவன் – மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி ஏற்படும்.

விருச்சிகம்:

virichigam புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைத்து உங்களுக்குப் பெருமை சேர்க்கும். அலுவலகத்தில் மற்றவர்களின் வேலைகளையும் நீங்கள் சேர்த்துப் பார்க்கவேண்டி வரும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

தனுசு:

Dhanusu Rasiஎதிர்பாராத தனலாபம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளை ஏற்கவேண்டி வரும் என்றாலும் அதனால் ஆதாயமும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகவே ஏற்றுக்கொள்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் முதலீடு செய்யவேண்டி இருக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணங்களால் அலைச்சல் உண்டாகும்.

மகரம்:

Magaram rasiதந்தையாலும் தந்தை வழி உறவினர்களாலும் நன்மைகள் உண்டாகும். அரசு காரியங்கள் அனுகூலமாகும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சிறிய அளவில் ஆதாயம் கிடைக்கும்.

கும்பம்:

Kumbam Rasiசகோதரர்களால் நன்மை ஏற்படும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது. வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும்.

மீனம்:

Meenam Rasiகாலையில் வழக்கமான வேலைகளில் மட்டுமே ஈடுபடவும். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். உங்களுடைய முயற்சிகளுக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

உங்கள் ராசிக்கான இன்றைய ராசி பலன் உங்களுக்கு நன்மை அளிக்க எங்களது வாழ்த்துக்கள்.

- Advertisement -