Rasi palan : இன்றைய ராசி பலன் – 18-05-2019

Rasi Palan
- Advertisement -

மேஷம்:
Mesham Rasi

புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. ஆனாலும், பணப் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் கடன் வாங்கவும் நேரும். மாலையில் வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.

ரிஷபம்:
Rishabam Rasi

இன்றைய தினம் உங்களுக்கு உற்சாகம் தருவதாக அமையும். கனிவான பேச்சால் மற்றவர்களைக் கவர்வீர்கள். பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த விஷயம் சாதகமாக முடியும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

- Advertisement -

மிதுனம்:
midhunam

அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சகோதர வகையில் அனுகூலம் ஏற்படும். சிலர் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.

கடகம்:
Kadagam Rasi

புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம். குடும்பப் பொறுப்புகளின் காரணமாக வெளியூர் செல்ல நேரிடும். சிலருக்குக் குடும்பத்துடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளைச் செலுத்தும் வாய்ப்பு உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

- Advertisement -

சிம்மம்:
simmam

இன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. தந்தை வழி உறவுகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் நன்மைகள் ஏற்படக்கூடும்.

கன்னி:
Kanni Rasi

காலைப் பொழுது இதமாக விடியும். மனதுக்கு இனிய செய்தியைக் கேட்பீர்கள். அன்றாடப் பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பிற்பகலுக்குமேல் வாழ்க்கைத் துணை வழியில் ஆதரவும் ஆதாயமும் உண்டாகும். ஆடம்பரப் பொருள்கள் வாங்குவீர்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi

காலைப் பொழுது இதமாக விடியும். மனதுக்கு இனிய சம்பவங்களைக் கேட்க நேரிடும். அன்றாடப் பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சித்திரை முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் ஆதாயமும் உண்டாகும்.

விருச்சிகம்:
virichigam

உற்சாகமாகக் காணப்படுவீர்கள். பரபரப்பாகச் செயல்படுவீர்கள். சிலருக்குத் திடீர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வரும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

தனுசு:
Dhanusu Rasi

காலையில் அன்றாடப் பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். பிற்பகலுக்கு மேல் வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கப் பெறுவீர்கள். இன்றைக்குப் புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடுவது நல்லது. மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.

மகரம்:
Magaram rasi

இன்று தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். மதிநுட்பத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். தொழில், வியாபாரம் செழித்து சமூகத்தில் புதிய அந்தஸ்து கிடைக்கும். சேமிக்கும் விதத்தில் லாபம் வரும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

இன்று வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். பணப்புழக்கம் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிப்பதால், நேரத்துக்குச் சாப்பிடமுடியாது. வியாபாரத்தில் விற்பனை மந்தமாகத்தான் இருக்கும். உறவினர்களால் மனச் சங்கடம் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

மீனம்:
meenam

மீன ராசிக்கு இன்றைய ராசி பலன் படி தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறுசிறு சங்கடங்களுக்கு ஆளாக நேரிடும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -