இன்றைய ராசி பலன் – 18-2-2020

rasi palan - 18-2-2020

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். எதைப் பற்றிய சிந்தனையும் இல்லாமல் உற்சாகமாக செயலாற்றும் நாளாக இருக்கும். தனவரவு எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு விருத்தி ஏற்படும். வெளிநாட்டு வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படுகிறது.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். நண்பர்களின் உதவிகள் தகுந்த சமயத்தில் கிடைக்கப் பெறும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்கப் பெற்று ஒரு உற்சாகம் தரும். பழைய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். வியாபார வளர்ச்சிக்கு தடைகளாக இருந்த தடைக்கற்கள் அனைத்தும் விலகும். அரசாங்க விஷயங்கள் அனுகூலமான முடிவு தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றாற்றில் சாதகமான சூழ்நிலை இருக்கும். தொலைதூரப் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் உதவிகள் கிட்டும். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். இதுவரை நீங்கள் அனுசரித்து சென்று கொண்டிருந்த குடும்பம் உங்களை அனுசரித்து செல்லும். கணவன் மனைவி இடையே அன்னோன்யம் அதிகரிக்கும். தேவையற்ற மருத்துவ செலவுகள் ஏற்படலாம். எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வியாபாரம் செய்பவர்கள் சாதுரியமான பேச்சு திறமையால் வெற்றி பெறுவீர்கள். வெளிநாடுகளில் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று நல்ல முன்னேற்றம் காணப்படும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்று இனிய நாளாக இருக்கும். உங்களின் எதிர்கால தேவைகள் குறித்த திட்டமிடல் மேலோங்கும். பெண்களுக்கு இறை வழிபாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி ஒரு புத்துணர்வு ஏற்படும். உயர்கல்வி பயில்பவர்கள் தங்களின் தனித் திறமையால் பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று நல்ல வழி உண்டாகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டவர்களுக்கு மிகுந்த எச்சரிக்கை தேவை.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தெளிவான முடிவுகளை எடுக்கும் நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். சமூகத்தில் இதுவரை இருந்து வந்த மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் தங்களின் திறமையை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் வெற்றி தரும். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். உயர் கல்வி பயில்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வீண் விரயங்கள் ஏற்படக்கூடும் எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் உண்டாகும்.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகுந்த கவனத்துடன் செயல்படும் ஒரு நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களின் வேலைகளை கவனத்துடன் முடித்து மேல் அதிகாரிகளால் பாராட்டுவீர்கள். உங்களின் உத்வேகம் பலருக்கு எடுத்துக்காட்டாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை காணப்படும். ஒரு சிலருக்கு அதிகப்படியான லாபம் கிடைக்கப் பெறும். குடும்பத்தில் அமைதி குடி கொண்டிருக்கும். கணவன் மனைவி இடையே சுமூகமான சூழ்நிலை நிலவும். மாணவர்களின் எதிர்கால நலனுக்கான திட்டமிடல் மேலோங்கும். பிள்ளைகளின் கல்வியில் பெற்றோர்கள் அக்கறை செலுத்துவது நல்லது.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உறவினர்களின் வருகையால் குதூகலத்துடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் யாரிடம் பேசினாலும் சற்று நிதானத்துடன் யோசித்து பேசுவது நல்லது. வியாபாரம் செய்பவர்களுக்கு எதிலும் சாதுரியம் தேவைப்படும் நாளாக இருக்கும். திட்டமிட்டு செயல்படும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக இருக்கும். மாணவர்களின் கல்வி நிலை சுமுகமாக காணப்படும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் சுபமாக முடியும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தனவரவு அதிகரித்து காணப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து எதிர்ப்பார்த்த பாக்கிகள் வசூலாகும். அதே நேரத்தில் தேவையற்ற செலவுகளும் வந்து சேரும். எனவே கவனமாக பணத்தை கையாள்வது நல்லது. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். மாணவ மாணவிகள் தங்களின் கல்வியில் போதிய அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரலாம் எனவே கவனத்துடன் இருப்பது நல்லது.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் விவேகத்துடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். தங்களின் கோப, தாபத்தை மறைத்து வைத்துக் கொண்டு வெற்றியை தரும். சக பணியாளர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வது நல்லது. வியாபாரம் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் இடத்தில் நன்மதிப்பு உண்டாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகையால் மன மகிழ்ச்சி காணப்படும். கணவன் மனைவி இடையே ஏற்படும் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு தாய் நாடு திரும்புவதற்கான திட்டமிடலில் சில சிக்கல்கள் உண்டாகக்கூடும். எனவே எச்சரிக்கையுடன் கையாள்வது நல்லது.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக நீங்கும். நல்ல அமைதியான சூழலில் இருவரும் மனம் விட்டு பேசுவதன் மூலம் பிரச்சனைகளை தீர்க்கலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல் உண்டு. பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் வாடிக்கையாளர்கள் இடத்தில் வாக்குவாதத்தை தவிர்த்து விட்டுக் கொடுப்பது நல்லது. உத்தியோகம் செய்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படும். ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் வீண் பிரச்சனைகள் ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். தேவையற்ற நபர்களால் பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உங்கள் வேலை உண்டு, நீங்கள் உண்டு என்று இருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. பெண்களுக்கு இறை வழிபாடுகளின் மூலம் நன்மைகள் உண்டாகும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பழைய நண்பர்களை காண்பதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். தேவையற்ற அலைச்சல்களை சந்திக்கக் கூடிய ஒரு நாளாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக சோர்வுடன் காணப்படுவார்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு அரசாங்க வழியில் சில பிரச்சனைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்பத்திலுள்ள நபர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து அனைவரிடமும் இன்முகத்துடன் இருப்பது இன்றைய நாளை சிறப்பாக்கி தரும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை. வழக்கு போன்றவற்றில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டு.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.