இன்றைய ராசி பலன் – 18-4-2020

rasi palan - 18-4-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். நண்பர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். தொழிலில் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு ஒரு பலமான பலன்களை பெறுவீர்கள். கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். கடன்களை குறைத்துக்கொள்வது மிகவும் நல்லது. வியாபாரத்தில் லாபம் கூடுதலாக இருக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பேச்சில் மட்டும் சற்று நிதானம் கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். தொழிலில் இருந்த பிரச்சினைகள் விலகி அனுகூலம் ஏற்படும். கூட்டாளிகள் ஆதரவாக இருப்பார்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்று வீர்கள். உத்தியோகத்தர்கள் அனுகூலமாக வெளியூர் பயணங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. உங்களில் பலன் அதிகரிக்கும் எதிரிகளின் பலம் குறையும். மாணவர்களின் படிப்பில் அக்கறை ஆக இருப்பது மிகவும் நல்லது. மாணவர்களுக்கு உயர் கல்வி கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கக்கூடும். எடுத்த செயல்கள் வெற்றி அடையும். கடந்த கால முதலீடுகள் நல்ல பலனைத்தரும். தடைகள் விலகி நன்மை ஏற்படும். பொருளாதார ரீதியான நல்ல மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் லாபமும் நஷ்டமும் சமமாக இருக்கக்கூடும். எதிலும் நிதானமாக செயல்படுவது மிகவும் நல்லது. பெரியோர்களை மதித்து நடந்தால் நன்மை உண்டாகும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய நாள் ஆகும். அலைச்சல்கள் சற்று அதிகமாக ஏற்படக்கூடும். தொழில் ரீதியாக பொருள் தேக்கம் ஏற்படும். வேலையாட்களின் ஒத்துழைப்பு பெரிய ஒத்துழைப்பாக இருக்காது. அவர்களுடன் நிதானமாக செயல்படவும். பெற்றோரின் ஆசீர்வாதம் கிடைக்கக்கூடும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மனைவிவழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைப்பதெல்லாம் நடக்கும். உடன் பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கலை பொறுத்தவரை உங்களுக்கு நல்ல பெயரும் புகழும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் தவழும் பணவரவு உண்டாகும். தொழிலை பொருத்தவரையில் தேக்கங்கள் நீங்கி நல்ல லாபம் உண்டாகும். பெரியோர்களை மதித்து நடப்பது வெற்றியை தரும். உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது மிகவும் நல்லது.

- Advertisement -

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்களை அளிக்கும். இருப்பினும் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது மிகவும் அவசியம். தொழிலில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகமாக இருந்தாலும் உடன் வேலை செய்பவர்களின் ஆதரவு இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணப் புழக்கம் மிக நன்றாக இருக்கும். நிதி நெருக்கடி எளிதாக சமாளிப்பீர்கள். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகத்தை பொருத்தவரை உங்களுக்கு இருந்த நெருக்கடி நிலை மாறி சாதகமான நிலை ஏற்படும். மாணவர்கள் படிப்பில் அக்கறையாக இருப்பது மிகவும் நல்லது. தாயின் உடல்நிலை கவனமாக இருக்க வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நண்பர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக கூட்டாளிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்குள் அன்பு நிறைந்து காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல பொருளாதார மேம்பாடு கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அலைச்சல்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவேண்டும். பொதுவாக எந்த செயலை செய்வதாக இருந்தாலும் காணமாக செய்வது மிகவும் அவசியம். பண விஷயத்தில் மிக கவனமாக இருக்கவும். பொதுவாக அதிக முதலீடுகளில் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது. மாணவர்களின் படிப்பு விஷயத்தில் அக்கறையாக இருப்பது மிகவும் நல்லது. கணவன் மனைவிக்குள் சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நெருங்கியவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தொழில் உத்தியோகத்தில் புதிய உத்தியை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வர வாய்ப்புகள் உள்ளது. நீண்டகாலமாக இருந்து தடைபட்ட பணம் வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.

கும்பம

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பலமும் வலிமையும் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய நிகழ்வுகள் நடக்க்கும். ஆன்மீகம் காரியங்களில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்களுடைய பேச்சுக்கு மரியாதையும் மதிப்பும் இருக்கும். சகோதரர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சிகரமான நாளாக அமைய போகிறது. வரவுகள் சிறப்பாக இருந்தாலும் செலவுகள் அதிகமாக ஏற்படும். தொழிலில் சற்று சங்கடங்களை சந்திக்க கூடும். பங்குதாரர்களுடன் விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் நல்லது. வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வண்டி வாகனம் செல்லும் போது நிதானத்தை கடைபிடிப்பது மிகவும் நல்லது. நீங்கள் திட்டமிட்ட அனைத்து காரியங்களும் வெற்றியை தரும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -