இன்றைய ராசி பலன் – 18-05-2021

rasi palan - 18-5-21
- Advertisement -

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்த இடத்தில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எண்ணும் காரியம் தடையில்லாமல் நடக்கும். உத்தியோத்தில் இருப்பவர்களுக்கு சக நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உங்களுடன் இருப்பவர்கள் உங்களை புரிந்து கொள்ள மாட்டார்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் ஒற்றுமை பலப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய முடிவுகள் சாதக பலன் கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிலும் வெற்றி காண்பீர்கள். பெண்களுக்கு குடும்பத்தில் பாராட்டுகள் கிடைக்கும்.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்காத சில விஷயங்கள் நன்மைகள் செய்யும் வகையில் நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். கிடைக்கும் வாய்ப்புகளை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்வது நல்லது. பெண்களுக்கு நன்மைகள் நடக்கும்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் இருக்கும் நபர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கும் ரகசியங்களை கட்டிக்காப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற வாகன பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எளிதான விஷயங்களுக்குக் கூட மெனக்கெட வேண்டிய அவசியம் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை தொடர்ந்து நீடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற பழிகள் வரக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. ஆரோக்கிய ரீதியான விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இது வரை நிலுவையில் இருந்த கடன் தொகைகள் கணிசமாக குறைய கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். குடும்பத்தில் குதூகலம் காணப்படும்.

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சமூகத்தின் மீதான அக்கறை மேலோங்கி காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கும் நுணுக்கங்களை கற்று சில மாற்றங்களைச் செய்வீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். உற்றார் உறவினர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆரோக்யம் சீராக இருக்கும்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் பணவரவு மனதிற்கு திருப்தி அளிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய அனுபவங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு வலுவாகும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு குறையும். பெண்கள் டென்சனுடன் காணப்படுவார்கள். வாகன போக்குவரத்தில் கவனம் தேவை.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முக்கிய முடிவுகளை எடுக்கும் முன் யோசித்து செயலாற்றுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சில பொறுப்புகள் அதிகமாக கொடுக்கப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை எப்படி காப்பாற்றுவது என்று தெரியாமல் குழம்பிப் போய் நிற்பீர்கள். எதையும் எதிர்கொள்ளும் தைரியம் பிறக்கும்.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறிய விஷயம் கூட பெரிதாக தெரியும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய அந்தஸ்து, மதிப்பு உயரும். வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை பெற முயல்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்த பொறுப்புகளை சரியாக செய்து முடிக்கும் வாய்ப்புகள் அமையும். உங்களுடைய திறமைக்கு உரிய பாராட்டுகளைப் பெறுவீர்கள். வெளியிட பயணங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பேச்சு குடும்பத்தினர் கேட்பார்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த வாக்குவாதங்களில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான பிரச்சனைகளை சமாளிக்கக்கூடிய தைரியம் பிறக்கும். புதிய நபர்களுடைய அறிமுகம் கிடைக்கும். தேவையற்ற பிரச்சனைகளில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடி வரும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் தளர்வு ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் விருத்தி அடைய புதிய விஷயங்களை செயலாற்றுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் பெறுவதில் இடையூறுகள் ஏற்படும். பெண்களுக்கு கூடுதல் பொறுப்புகளை சுமக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

- Advertisement -