இன்றைய ராசி பலன் – 18-6-2020

rasi palan - 18-6-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த ஒரு விஷயம் சிறப்பாக நடந்து முடியும். தாய்வழி உறவினர்களால் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உங்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் மிகவும் அதிகரிக்கும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். குலதெய்வ வழிபாடு உங்கள் குடும்பத்திற்கு நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே அன்பு நிறைந்து காணப்படும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் உங்களுடைய வார்த்தைக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். சொத்துப் பிரச்சினைகள் அனைத்தும் சுமூகமாக முடியும். ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். உங்களுடைய விடா முயற்சியால் முன்னேற்றம் அடைவீர்கள். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் நீண்ட நாளாக பிரிந்திருந்த உறவினர்கள் ஒன்றுசேர்வார்கள். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் கவனமாக இருப்பது மிகவும் நல்லது.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்குள் அன்பும் அக்கறையும் அதிகரிக்கும். நீண்ட நாளாக இருந்த பிரச்சினைகள் அனைத்திற்கும் ஒரு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் உங்களுக்கு சிறுசிறு பிரச்சினைகள் வந்தாலும் அதனை சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். இது உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தரும் நாளாக அமைய போகிறது.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுக்க வேண்டாம். ஒரு சில பேருக்கு சிறுசிறு அவமானங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் வேலையாட்கள் திறம்பட செயல்படுவார்கள். நீங்கள் பிறருக்கு பணம் கொடுப்பதை தவிர்க்கவும். நீண்ட நாளாக வராத கடன் தொகை வந்து சேரும். எந்த காரியத்தை செய்தாலும் அதனை திறம்பட செய்வீர்கள்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தை விட்டுக் கொடுத்துப் போவது மிகவும் நல்லது. சகோதர சகோதரிகளிடம் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். காதல் விவகாரங்களில் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். திருமணம் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும் வாய்ப்புகளும் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் தொழிலாளர்களிடம் அனுசரணையாக செல்வது மிகவும் நல்லது.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். அடுத்தவர்களின் நிலையை யோசித்து பேசும் மனப்பான்மை உடையவர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். உங்களுடைய சாமர்த்தியத்தால் புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உள்ளது. பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் உள்ளது.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களை நம்பி முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தங்கள் செய்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் யோசித்து செயல்படுவது மிகவும் நல்லது. செலவுகள் அதிகரிப்பதால் கவனமாக இருப்பது மிகவும் நல்லது.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் குடும்பத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று உங்களுக்கு புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் செய்வீர்கள். நண்பர்களால் ஒரு சில உதவி கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. யாரையும் நம்பி எதையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடைவீர்கள். நீங்கள் செய்யும் அனைத்து விஷயங்களிலும் பலன் கிடைக்கும்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் பொறுமையாக இருப்பது மிகவும் நல்லது. பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். இன்று உங்களுக்கு பணம் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. செலவுகளும் அதிகரிக்கும் எனினும் குடும்பத்தில் வெறுப்பை காட்டுவது தவிர்க்கவேண்டும். கணவன்-மனைவிக்கிடையே அன்பு நிறைந்து காணப்படும். தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளுக்கு செல்வீர்கள் உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள். உயர் பதவி கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. எந்த வித புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. மனைவி வழியில் ஆதரவு பெருகும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படும் நாளாக இருக்கும். நண்பர்களால் பண உதவி கிடைக்கும். எந்த ஒரு செயல் எடுத்தாலும் அதில் நம்பிக்கையுடன் செய்வது மிகவும் நல்லது. புதிய வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உங்களுடைய பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு நிறைந்து காணப்படும் காணப்படும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உங்களின் பிள்ளைகளின் சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவீர்கள். பணத்தை வீண் செலவு செய்யாமல் சிக்கனத்துடன் இருப்பது மிகவும் நல்லது. உங்களுக்கு வேற்று மதகாரர்கள் உதவியாக இருப்பார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். எதை செய்தாலும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வீர்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.