இன்றைய ராசி பலன் – 19-03-2018

12-rasi-jothidam
- Advertisement -

மேஷம்:
mesham
உற்சாகமான நாள். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமையால் சற்று சோர்வாக காணப்படுவீர்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். மாலையில் முக்கிய பிரமுகர் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

ரிஷபம்:
rishabam
புதிய முயற்சிகள் தவிர் விடுங்கள். விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் உங்கள் பணியை கண்டு அதிகாரிகளால் பாராட்டுப்பெறுவீர்கள். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமான நாள்.

மிதுனம்:
Midhunam
தாயின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வீண்செலவுகள் உண்டாகும். பணம் கையில் இருப்பதால் அதை சமாளித்து விடுவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமாக காணப்படுவீர்கள். பிரார்த்தனைகளை நிறைவேற்ற வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடும். எதிர்பாராத பணம் வந்து சேரும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் உண்டாகும்.

கடகம் :
Kadagam

புதிய முயற்சிகள் மாலையில் தொடங்குவது நல்லது. தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மற்றவர்களிடம் பேசும் பொது பொறுமையை கடைபிடியுங்கள். அலுவலகம் வேலையாக வெளியூர் பயணம் மேற்கிளவிர்கள். எதிர்பார்த்த வந்து சேர தாமதமாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கூடுதலாக இருக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகளை தவித்துவிடுங்கள்.

சிம்மம்:
simam
உற்சாகமான நாள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மனக்கசப்புகள் உண்டாகும். சகோதரர்களால் எடுத்த காரியங்களில் வெற்றிபெறுவீர்கள். அலுவலகத்தில் பணியாளர்களை அனுசரிச்சி செல்லுங்கள். தாய்வழி உறவுகளால் நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரம் வழக்கம் போல் நடக்கும். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை.

இதையும் படிக்கலாமே:
பங்குனி மாத ராசி பலன் 2018

- Advertisement -

கன்னி:

புதிய முயற்சியில் ஈடுபடவேண்டாம். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் அதிகரிக்கும். எதிர்பாராத பணம் வந்து சேரும். நண்பர்களின் சந்திப்பு ஆறுதலாக இருக்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரிச்சி செல்லுங்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

துலாம்:

தன்னபிக்கையுடன் காணப்படுவீர்கள். எதிரிகளால் மறைமுகமாக தொந்தரவுகள் உண்டாகும். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் தாமதமாகும். தாய்வழியில் எதிர்பாராதா நல்ல செய்தி வந்து சேரும். பிள்ளைகளால் செலவுகள் உண்டாகும். மாலையில் பள்ளி நண்பர்களை சந்தித்து உரையாடுவீர்கள். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

விருச்சிகம்:

தாயின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள். சகோதரர்களால் எடுத்த காரியங்களில் நன்மை கிடைக்கும். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மாலையில் முக்கிய பிரமுர்ககள் அறிமுகமாவார்கள். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.

தனுசு:

அனுகூலமான நாள். தாயின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். மாலையில் பள்ளி நண்பர்களை சந்தித்து உரையாடுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் உண்டாகும்.

மகரம்:
magaram
உற்சாகமான நாள். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் சுலபமாக முடியும். குடும்பத்தாரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வாழ்க்கைத்துணைவியால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருங்கள்.

கும்பம்:

அரசாங்கம் சார்ந்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சலசலப்பு உண்டாகும். பிரார்த்தனைகளை நிறைவேற்ற வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். திடீர் செலவுகள் ஏற்படுவதால், கடன் வாங்க நேரிடும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர்பாராத பணம் வந்து சேரக்கூடும்.

மீனம்:

மகிழ்ச்சியான நாள். தந்தை வழியில் எதிர்பாராத நல்ல செய்தி வந்து சேரும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். அலுவலகம் பணிகள் தாமதமாக முடியும். மாலையில் புதிய முயற்சிகளை தொடங்குவது நல்லது. எதிர்பாராத கடன் பிரச்சனைகள் உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர்களால் விற்பனை மந்தமாகத்தான் இருக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை தவிர்த்து விடுங்கள்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -