Rasi palan : இன்றைய ராசி பலன் – 19-04-2019

Rasi Palan
- Advertisement -

மேஷம்:
Mesham Rasi

மனதில் சிறு அளவில் சோர்வு ஏற்படும். வாழ்க்கைத்துணை வழியில் நன்மைகள் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. தாய்மாமன் வகையில் ஆதாயம் உண்டாகும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் சகோதரர்களுடன் சிறு அளவில் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும்.

ரிஷபம்:
Rishabam Rasi

காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். வெளியில் போகும்போது பொருட்கள் தொலைந்து போகக்கூடும் என்பதால் எச்சரிக்கை அவசியம். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் ஏற்படும்.

- Advertisement -

மிதுனம்:
midhunam

வாழ்க்கைத் துணை வழியில் பணவரவு உண்டாகும். உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் நன்மை ஏற்படும்.

கடகம்:
Kadagam Rasi

மனம் உற்சாகமாகக் காணப்படும். நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் நண்பர்களால் மகிழ்ச்சி உண்டாகும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க அனுகூலம் உண்டாகும்.

- Advertisement -

சிம்மம்:
simmam

ஒரு சிலருக்கு வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். பள்ளிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். ஒரு சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. வாழ்க்கைத்துணை வழியில் நன்மைகள் உண்டாகும்.பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாகன யோகம் உண்டாகும்.

கன்னி:
Kanni Rasi

புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்தும் வாய்ப்பும் சிலருக்குக் கிடைக்கும். பிற்பகலுக்குமேல் எதிர்பாராத வகையில் உறவினர்களின் வருகையும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் யோசித்து ஈடுபடுவது நல்லது.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi

துலாம் ராசிக்கு இன்றைய ராசி பலன் படி எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். அவர்களால் சில நல்ல திருப்பங்களும் ஏற்படக்கூடும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் பயணம் தவிர்க்கவும்.

விருச்சிகம்:
virichigam

இன்று நீங்கள் அன்றாடப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். நண்பர்களிடம் கேட்ட உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் தருவதாக இருக்கும். தேவைப்படும் பணம் கடனாகக் கிடைக்கும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பேச்சில் பொறுமை அவசியம்.

தனுசு:
Dhanusu Rasi

அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர்களில் இருந்து சுபச் செய்திகள் வரும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணிகளில் கவனமாக இருக்கவும்.

மகரம்:
Magaram rasi

வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். தாயின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும். எதிர்பாராத செலவுகள் ஏற்படுவதால், சிறிய அளவில் கடன் வாங்க நேரிடும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மீனம்:
meenam

புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -