Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (19/07/2019): வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பாராத ஆதாயம் உண்டாகும்.

Rasi Palan
- Advertisement -

மேஷம்:

பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். வெளியூர்களிலிருந்து நல்ல சுபச் செய்திகள் வரும். தந்தையை அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்பு ஏற்படக்கூடும்.

- Advertisement -

ரிஷபம்:
Rishabam Rasi

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும். பிற்பகலுக்குமேல் வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கப்பெறுவீர்கள். மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புண்ணிய தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டு.

மிதுனம்:
midhunam

எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. இன்று நீங்கள் தொடங்கும் காரியங்கள் அனைத்தும் சாதகமாக முடியும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும்.

- Advertisement -

கடகம்:
Kadagam Rasi

வாழ்க்கைத்துணை வழியில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தினருக்குப் புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். மனம் உற்சாகமாகக் காணப்படும். சிலருக்குப் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கும், எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் நன்மை உண்டாகும்.

சிம்மம்:
simmam

தாய்வழி உறவினர்களால் நன்மைகள் உண்டாகும். ஆனாலும், முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். இன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.

- Advertisement -

கன்னி:
Kanni Rasi

ஒரு சிலருக்குக் குடும்பத்துடன் சென்று குலதெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு உண்டாகும். எந்த ஒரு பணியையும் பொறுமையுடன் செய்வது நல்லது. வியாபாரத்தில் எதிர்பாராத வகையில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். உற்சாகமான நாளாக இருக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

துலாம்:
Thulam Rasi

துலாம் ராசிக்கு இன்றைய ராசி பலன் படி எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

விருச்சிகம்:
virichigam

சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பாராத ஆதாயம் உண்டாகும். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். பிற்பகலுக்குமேல் சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நவீன டிசைனில் ஆடைகள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.

தனுசு:
Dhanusu Rasi

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பிற்பகலுக்குமேல் தேவையற்ற அலைச்சல் உங்களை சோர்வு அடையச் செய்யும். அலுவலகத்தில் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்கவேண்டிய நிலை ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பேசுங்கள். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு இருக்கும்.

மகரம்:
Magaram rasi

உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். ஒரு சிலருக்கு வேலையின் காரணமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். திருவோணம் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் ஆதாயமும் உண்டாகும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

வெளியில் செல்லும்போது பள்ளி, கல்லூரி கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பிற்பகலுக்கு மேல் சிலருக்கு எதிர்பாராத சந்திப்பு மகிழ்ச்சி தரும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிற்பகலுக்குமேல் சிலருக்குச் சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் நன்மை ஏற்படக்கூடும்.

மீனம்:
meenam

எதிர்பாராத விருந்தினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஒரு சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும், அவர்களால் நன்மையும் உண்டாகும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -