இன்றைய ராசி பலன் – 19-07-2020

rasi palan - 19-7-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் உற்சாகமாக இருப்பீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆன்மிக பயணங்கள் மன அமைதியை தரும். இன்று நீங்கள் தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவதால் மிகவும் நன்மையளிக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனநிம்மதி ஏற்படும். சுப விரயச் செலவுகள் அதிகரிக்கும் நாளாக அமையும். நீங்கள் நினைத்த வேலைகள் அனைத்தும் சுமுகமாக முடியும். பணவரவு அதிகரிக்கும். தாயின் உடல்நிலை ஆரோக்கியம் தேவை. குடும்பத்தாரிடம் சிறு சிறு மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பேச்சில் நிதானம் தேவை.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்கிறீர்கள். புதிய முயற்சிகளால் குடும்பத்திற்கு ஆதாயம் உண்டாகும். நண்பர்களால் நன்மை உண்டாகும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

கடகம்

- Advertisement -

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக அமையும் நீங்கள் எதிர்பார்த்த கொண்டிருந்த விஷயங்கள் அனைத்தும் தடையின்றி நடைபெறும். உங்கள் பழைய நண்பர்கள் உங்களைத் தேடிவரும் வாய்ப்பு உள்ளது. வீடு மனை வாங்கும் யோகம் உள்ளது.

சிம்மம்

- Advertisement -

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வந்து நீங்கும். மன தைரியத்துடன் செயல்படுவீர்கள். வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் யோகம் உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பணிச்சுமை சிறிது அதிகமாக இருந்தாலும் அதனை மகிழ்ச்சியாக செய்வீர்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் மன அமைதியுடன் இருப்பது நல்லது. மற்றவர்களுடன் பேசும்பொழுது நிதானமாகப் பேசுங்கள். நீண்ட நாளாக வராத பணம் கைக்கு வந்து சேரும். நீங்கள் மனக் குழப்பத்துடன் காண்பீர்கள். மற்றவர்களுக்கு கடன் கொடுக்கும்போது கவனமாக இருப்பது நல்லது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். கணவன்-மனைவிக்கிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதனை சரி செய்து விடுவீர்கள். சுப செய்திகள் வந்து சேரும் உங்கள் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் சிறிது கவனமாக இருப்பது நல்லது. உடன்பிறந்தவர்களுடன் சிறு சிறு மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். பழைய நண்பர்கள் சந்திப்பால் மன மகிழ்ச்சி உண்டாகும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி அடையும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வேலையில் பொறுமையுடன் நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பிள்ளைகளால் பெருமை உண்டாகும் பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். வீண் விவாதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பண செலவு அதிகமாக இருக்கும். ஆடை ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் மன நிம்மதி ஏற்படும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வியாபாரத்தில் இன்று உங்களுக்கு பண வரவு அமோகமாக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சுப செய்தி உங்களைத் தேடிவரும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக இருப்பதன் மூலம் அதிக லாபத்தை ஈட்டுவீர்கள். குடும்பத்தில் உங்களுடைய மதிப்பு உயரும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறு மனக்கசப்புகள் ஏற்படும். எந்த வேலையை எடுத்தாலும் அதில் வெற்றி காண்பீர்கள். உங்கள் உடல்நிலையில் அக்கறை தேவை. நீங்கள் மனக் குழப்பத்தில் இருக்கும் பொழுது எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -