இன்றைய ராசி பலன் – 19-1-2020

rasi palan - 19-1-2020
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவோர்க்கு சற்று கால தாமதம் ஆனாலும் வெற்றி கிடைக்கும். கல்வியில் மாணவர்களுக்கு கூடுதல் கவனம் தேவை. வெளிநாடு செல்ல காத்திருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாவதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் சிறிது காலதாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். மனதுக்கு பிடித்தவர்களால் சில காயங்கள் ஏற்படலாம்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். வெளிநாடு செல்ல முயற்சி செய்வோருக்கு வெற்றி கிட்டும். சுயதொழில் புரிவோர் முன்னேற்றமான சூழ்நிலையை காண்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி மாற்றம், இடமாற்றம் போன்றவை ஏற்பட்டு மன உளைச்சலை உண்டாக்கும். கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு நீங்கி குடும்பத்தில் அமைதி நிலவும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை நிச்சயம் அமையும். குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி இருப்போருக்கு நல்ல தகவல் வந்து சேரும். மருத்துவம் தொடர்பான செலவுகள் ஏற்படுவதற்கான சூழ்நிலை நிலவுகிறது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் புது உத்திகளை கையாள்வதன் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறலாம். கல்வியில் மாணவர்கள் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உயர்கல்வி பயில்வோர்க்கு நல்ல தகவல் கிடைக்கப் பெறும். குடும்பத்தில் உள்ள நபர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சகோதர சகோதரிகள் இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை பலப்படும். உங்களது கடின முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும்.

கடகம்:கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நாள் சிறப்பான நாளாக இருக்கும். சுய தொழில் புரிவோருக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரம் விருத்தி அடையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. பணியிடத்தில் கவனக்குறைவால் சில பிரச்சனைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன. எச்சரிக்கை தேவை. கணவன் மனைவியிடையே சிறுசிறு சண்டைகள் ஏற்படுவதற்கான சூழ்நிலை நிலவும். ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவுவதற்கு அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் இன்றைய நாளை சிறப்பாக்கிக் கொள்ளலாம். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் ஆதாயம் கிடைக்கும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய தொழில் புரிவோருக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தில் ஒருசிலருக்கு மந்தநிலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கான சூழ்நிலை ஏற்படலாம். எதிர்பாராத பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உயர்கல்வி பயில்வோர்க்கு வெற்றி கிட்டும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்வதற்கு வாய்ப்புகள் உருவாகும். புதிய ஒப்பந்தங்களால் முன்னேற்றம் கிட்டும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் காலதாமதம் ஏற்படலாம். வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். திடீர் பயணம் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. பயணங்களால் ஆதாயம் உண்டு. மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உயர்கல்வி பயில்வோர்க்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் மூலம் ஆதாயம் கிட்டும். பொருளாதார பற்றாக்குறையை சிறப்பாக சமாளிப்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கின்றன எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது. புதிய தொழில் புரிவோருக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரம் மந்த நிலை ஏற்படலாம். புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி காத்திருப்போருக்கு நல்ல செய்திகள் வந்து சேரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உங்களது விடா முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். அனைவரும் பாராட்டும்படி உங்களது பணியை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோர்க்கு வெற்றி கிட்டும். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். வீண் விரயங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கி அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். வெளிநாடு செல்வோருக்கு நல்ல தகவல் வந்து சேரும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். எதிர்பாராத நபர்களை சந்திக்க நேரலாம். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் இருக்கும். சகோதர சகோதரிகளால் ஆதாயம் உண்டு. இறை வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு காரணமாக சோர்வுடன் காணப்படுவார்கள். குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி காத்திருப்போருக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். பொருளாதார பற்றாக்குறை நீங்கும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறும். வழக்குகள் தொடர்பான விஷயங்களில் வெற்றி கிட்டும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளை சற்று தள்ளிவைப்பது நல்லது. யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போடாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. இட மாற்றம், வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. மனதிற்கு பிடித்தவர்கள் மன உளைச்சல் உண்டாகும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக நடைபெறாமல் தடைபட்டுக் கொண்டிருந்த காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். வீடு கட்டுவது தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு எதிர்நோக்கி காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும். கல்வியில் மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். தொலைதூரப் பயணங்களால் ஆதாயம் உண்டு. நண்பர்களின் சேர்க்கையால் சில பிரச்சினைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. எச்சரிக்கை தேவை. ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மூன்றாம் நபர்களிடம் இருந்து சற்று கவனமாக இருக்க வேண்டும். மனதிற்கு பிடித்தவர்களால் மன மகிழ்ச்சி உண்டாகும். வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும். வெளிநாடுகளில் வசிப்போர் தாய் நாடு திரும்புவதற்கான திட்டமிடல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. நண்பர்களால் ஆதாயம் உண்டு.

- Advertisement -