இன்றைய ராசி பலன் – 19-12-2019

Rasi Palan
- Advertisement -

மேஷம்:
இன்று உங்களின் கடின முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கப் போகிறது. உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் முயற்சிக்கு உரிய ஊதியம் பெறுவீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை ஓங்கி இருக்கும்.

ரிஷபம்:
இன்று உங்களுக்கு வீண் செலவுகள் ஏற்படலாம். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். எச்சரிக்கையாக இருங்கள். தேவையற்ற வாக்குவாதங்களை இன்றைய தினத்தில் நீங்கள் தவிர்ப்பதுதான் நல்லது. எதையும் ஒன்றுக்கு நான்கு முறை யோசித்து செயலாற்றுங்கள்.

- Advertisement -

மிதுனம்:
இன்று எதிர்பாராத மருத்துவ செலவுகள் உருவாகலாம். இன்றைய தினத்தில் நீங்கள் நிதானமாக இருப்பது நல்லது. கோபம் ஏற்படும் போது அதனை அடக்கி ஆள்வது சிறந்தது. கணவன் – மனைவியிடையே சண்டைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எந்த முடிவுகளையும் இன்றைய தினத்தில் எடுக்காமல் இருப்பது சிறந்தது.

கடகம்:
இன்றைய தினம் உங்களுக்கு சுறுசுறுப்பாக இருக்கும். புதிய முதலீடுகளை செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. தனலாபம் திருப்திகரமாக இருக்கும். கணவன் – மனைவியிடையே ஒற்றுமை நிலவும். எதிர்பாராத நபர்களால் உற்சாகமாக காணப்படுவீர்கள்.

- Advertisement -

சிம்மம்:
இன்றைய நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாளாகும். எதிலும் நிதானம் கவனம் தேவை. தியானம் முதலியவற்றில் ஈடுபடுவது சிறந்தது. நேரத்தை செலவழிக்காமல் சரியான திட்டமிடலுடன் செயல்பட்டால் நிச்சயம் வெற்றி காணலாம். நேர விரயம், பண விரயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய நாள் இது.

கன்னி:
இன்று உங்கள் உடல்நலனில் பாதிப்புகள் ஏற்படலாம். கவனமாக இருப்பது நல்லது. கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வீண் விரயங்கள் ஏற்படும் நாளிது எனவே தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளவும். எதிலும் சிந்தித்து செயல்படுவது இன்றைய தினத்தை சிறப்பாக அமைப்பதற்கு உதவிகரமாக இருக்கும்.

- Advertisement -

துலாம்:
இன்றைய நாளில் எந்த செயலை தொடங்கும் முன்பும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற சிந்தனைகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் பிரச்சினைகள் ஏற்படலாம். நிதானமாக இருப்பது நல்லது. கணவன் – மனைவிக்கிடையே அன்னோன்யம் இருக்கும். வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும்.

விருச்சிகம்:
இன்றைய தினம் உங்களுக்கு மிகவும் நல்ல நாளாக அமைய இருக்கிறது. புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். கணவன் – மனைவியிடையே ஒற்றுமை நிலவும். வெகுநாளாக செய்ய நினைத்த காரியங்களை இன்றைய தினத்தில் சிறப்பாக செய்ய இருக்கிறீர்கள்.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான 2020 புத்தாண்டு பலன்கள்

தனுசு:
இன்றைய தினம் உங்கள் உங்கள் தன வரவு திருப்திகரமாக இருக்கிறது. எதிர்பார்த்த இடத்திலிருந்து எதிர்பார்த்தபடி பணம் வசூலாகும். கணவன் – மனைவியிடையே ஒற்றுமை இருக்கும். எனினும் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள்.

மகரம்:
இன்றைய தினம் உங்களுக்கு ஓய்வே இல்லாமல் உழைக்கக்கூடிய நாளாக இருக்கும். உடல்நலனில் அக்கறை தேவை. சோர்வின் காரணமாக சில தவறுகளை செய்ய நேரலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்கள் மன இறுக்கத்தில் இருந்து விடுபட யோகா போன்றவற்றை மேற்கொள்ளலாம். எதிலும் நிதானம் தேவை.

கும்பம்:
இன்றைய தினத்தில் வீண் விரயங்கள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். கணவன் – மனைவி இடையே சண்டை, சச்சரவுகள் ஏற்படாமலிருக்க பொறுமை காப்பது அவசியம். எந்த காரியத்தையும் திட்டமிட்டு செய்தால் காரிய வெற்றி கிட்டும்.

மீனம்:
இந்த தினத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்க நேரலாம். சிலர் உங்கள் பலவீனத்தை பயன்படுத்த பார்க்கலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பணவரவு திருப்திகரமாக இருக்கும். இன்றைய தினத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் சிறப்பானதாக அமையும். கணவன் – மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

- Advertisement -