இன்றைய ராசி பலன் – 19-2-2020

rasi palan - 19-2-2020

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகம் பொறுமையுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டியது அவசியமாக இருக்கும். சமுதாயத்தின் மீது உங்களுக்கு இருக்கும் அக்கறை அதிகரிக்கும். பெண்களுக்கு அதிகம் வேலைப்பளு இருக்கும். அதனால் சோர்வுடன் காணப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. உங்களின் இரக்க சுபாவத்தை சிலர் பயன்படுத்தி கொள்ள முயல்வார்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்லதொரு நாளாக அமையும். பொருளாதார முன்னேற்றம் நன்றாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபார விருத்திக்காக சில முயற்சிகளை எடுக்க வேண்டியது வரலாம். உத்தியோகம் செய்பவர்களுக்கு மான சூழ்நிலை காணப்படும். தொட்டதெல்லாம் வெற்றி தான். அடுத்தவர்களின் நலனில் நீங்கள் எடுக்கும் அக்கறை உங்கள் குடும்பத்தின் மீது இருப்பது நல்லது. மாணவர்களின் கல்வியில் கூடுதல் அக்கறை தேவை. வெளிநாடு வேலை வாய்ப்புக்காக எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டு. ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் உண்டாகும்.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றகரமான நாளாக இருக்கும். உத்தியோகம் செய்பவர்களுக்கு சக பணியாளர்களிடம் சில சங்கடங்கள் உருவாகலாம். உங்களுக்கு இருக்கும் மேல் அதிகாரிகளுடனான நட்புணர்வு சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு பொருளாதாரத்தில் சில சினைகள் ஏற்படலாம். முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உங்களின் பலவீனமே சிலருக்கு பலமாக அமையலாம். எந்த முடிவை எடுப்பது ஆனாலும் ஒருமுறைக்கு இருமுறை ஆலோசித்து எடுப்பது நல்லது. மாணவர்களின் கல்வி நிலையில் முன்னேற்றம் இருக்கும்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களின் நகைச்சுவையான பேச்சு திறமையால் பலரின் மனதை கவர்வீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பொருளாதாரத்தில் பற்றாக்குறை இருப்பினும் திறம்பட சமாளிப்பீர்கள். திருமணம் பட்டுப் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சில மனக் குறைகள் ஏற்படலாம். சிந்தித்து செயலாற்றுவது நல்லது. குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டு. வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய் நாடு திரும்புவது கலை சந்திக்க நேரிடலாம். முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மௌனத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற கருத்துக்களை பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். வியாபாரம் செய்பவர்கள் வியாபாரத்தில் கூடுதல் கவனம் கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவ நீங்கள் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம். மூன்றாம் நபர்களிடம் எச்சரிக்கை தேவை.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் நன்மைகள் உண்டாகும். வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபார விருத்தி உண்டு. எந்த முடிவை எடுப்பது ஆனாலும் அடுத்தவர்களின் கருத்தைக் கேட்காமல் சுய முடிவை எடுப்பது நல்லது. உத்தியோகம் செய்பவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை உண்டு. குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு சென்று வருவதன் மூலம் மன நிம்மதி கிட்டும். பெண்களுக்கு இறை வழிபாடுகள் மூலம் மன நிம்மதி கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும். மாணவர்களின் கல்வியில் அக்கறை தேவை.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். தேவையற்ற அலைச்சல்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையே அன்பை அதிகரிக்கும். சகோதர சகோதரி பிரச்சனைகள் தீரும். பெரியவர்களின் ஆசீர்வாதம் கிட்டும். வியாபாரம் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் இடத்தில் நன்மதிப்பு கூடும். உங்களின் நாணயத்தால் நன்மைகள் பல கிட்டும். வழக்கு போன்ற எங்களில் சாதகமான சூழ்நிலை உண்டு. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தடையின்றி வெற்றி பெறும்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மை ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். உத்தியோகம் செய்பவர்களுக்கு ஊதிய உயர்வு பதவி உயர்வு போன்ற விஷயங்களில் சாதகமான சூழ்நிலை உண்டு. நீங்கள் நினைத்த காரியங்கள் கைகூடும். சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். மாணவர்கள் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் செலுத்த வேண்டும். உயர் கல்வி பயில்பவர்கள் தங்களின் சாதுரியத்தால் வெற்றி பெறுவீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு உண்டு. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத விஷயங்கள் நடைபெறும் நாளாக இருக்கும்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றமான நாளாக இருக்கும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்றவற்றில் கால தாமதம் ஏற்படலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபகரமான நாளாக இருக்கும். கூட்டுத்தொழில் முயற்சிகள் பலன் தரும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் தடையின்றி வெற்றி பெறும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகையால் குதூகலத்துடன் காணப்படுவீர்கள். பொருளாதார பற்றாக்குறை இருப்பினும் சமாளிப்பீர்கள். பெற்றோர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பது நல்லது.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகம் செய்பவர்களுக்கு மேலதிகாரிகள் உடைய ஆதரவு கிட்டும். சக பணியாளர்கள் இடத்தில் நட்பு பாராட்டுவது நல்லது. வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம். மாணவர்களின் கல்வியில் பெற்றோர்கள் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். வெளிநாட்டு வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டு. பெண்களுக்கு வேலை பளு காரணமாக உடல் உபாதைகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீண் விரயங்களை சந்திக்க கூடிய நாளாக இருக்கும். நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு காரணமாக சிறிது சோர்வுடன் காணப்படுவீர்கள். சுயதொழில் புரியும் பெண்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் மேற்கொள்பவர்கள் ஒருமுறைக்கு இருமுறை ஆலோசித்த பின் முடிவு எடுப்பது நல்லது. கூடாத நண்பர்களின் சேர்க்கையால் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். எனவே முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் உண்டு.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உத்தியோகம் செய்பவர்கள் செய்யும் வேலையில் கவனத்துடன் இருப்பது நல்லது. உங்களின் கவனக்குறைவால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம். வியாபாரம் செய்பவர்கள் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் துணிவு உங்களிடம் இருக்கும். எந்த கஷ்டமான சூழ்நிலையிலும் சமாளிப்பீர்கள். உங்களின் மன தைரியமே உங்களின் பலமாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் உண்டு. கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.