இன்றைய ராசி பலன் – 19-05-2021

rasi palan - 19-5-21

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகள் மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பழைய நண்பர்களின் உதவி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கூட்டாளிகளுடன் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். பெண்களுக்கு குடும்பத்தில் மரியாதை அதிகரிக்கும்.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்துடன் இருந்து வந்த சில பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கி காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆலோசனை கிடைக்கும். பெண்களுக்கு மனோ தைரியம் அதிகரிக்கும்.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இதுவரை முடிக்காமல் இருந்த சில விஷயங்கள் முடித்து விடக்கூடிய சந்தர்ப்பம் அமையும். தொலை தூர இடங்களிலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக அமையும். பெண்களுக்கு திடீர் தனவரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருக்கும் தேவையற்ற குழப்பங்கள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும் அபாயம் உண்டு. கூடுமான வரை பொறுமை காப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முதலீடுகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும். வாடிக்கையாளர்கள் நன்மதிப்பைப் பெற முயற்சி செய்வீர்கள். பெண்களுக்கு தைரியம் தேவை.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் ஏற்றம் காணலாம். தொழில் மற்றும் வியாபார ரீதியான போக்குவரத்துகளில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியிடங்களில் கவனம் தேவை. ஆரோக்கியம் சீராக இருக்கும். பெண்களுக்கு நினைத்தது நடக்கும்.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. எதையும் சிந்திக்காமல் செயல்படுவதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முடிவுகள் எடுப்பதில் ஒரு முறைக்கு இரு முறை ஆலோசனை செய்து கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சனைகள் தீரும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் மானசீகமாக ஏற்றுக் கொள்ளுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை ஓரளவுக்கு மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சமாளிக்கும் தைரியம் உண்டாகும். பெண்கள் உங்களை எதிர்ப்பவர்களை நேருக்கு நேர் நின்று வென்று காட்டுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்ப தேவைகளை எளிதாக பூர்த்தி செய்யுமளவிற்கு பணவரவு திருப்திகரமாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை மாறி சில விஷயங்களை புதிதாக செய்ய முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு பெறும் யோகமுண்டு.

தனுசு:
Dhanusu Rasi
தனசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வாட்டி வதைக்கும் மனக் கவலைகள் நீங்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் தொட்டதெல்லாம் துலங்க கூடிய வாய்ப்பு உண்டு. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நினைத்த காரியங்கள் நடக்கும். பெண்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் மனதில் நின்ற சில விஷயங்கள் எதிர்மறையாக நடக்கலாம். ஒரு விஷயத்தை ஒரு முறைக்கு பலமுறை யோசனை செய்து விட்டு முடிவெடுப்பது நல்லது. திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வு போன்றவை சாதக பலன்களை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர புதிய முயற்சி செய்வீர்கள்.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். உங்கள் கருத்துக்களுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள். பெண்கள் கையில் பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் பிரச்சனைகளை தடுக்கலாம். உத்தியோகத்தில் மன அமைதி இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் தீரக் கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியம் எச்சரிக்கை தேவை.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீட்டுத் தேவைகளைப் பூர்த்திசெய்ய பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சரியாக கையாளுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு சரியான நேரத்தில் கிடைக்கும். எதிர்பார்க்கும் சலுகைகள் உத்தியோகத்தில் இருப்பவர்கள் பெறுவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் முன்னேற்றம் காணலாம். ஆரோக்கியம் படிப்படியாக சீராகும்.