இன்றைய ராசி பலன் – 19-5-2020

rasi palan - 19-5-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அரசாங்க காரியங்கள் சுமுகமாக முடியும் வாய்ப்புகள் உள்ளது. பணவரவுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடி அமையும். சகோதரர்களால் சில சில பிரச்சனைகள் வந்து நீங்கும். தந்தைவழி உறவினர்களால் பண உதவி கிடைக்கும். உங்களுடைய வாழ்க்கைத் துணை உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அற்புதமாக அமையும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கை துணையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உங்களுடைய தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் வெற்றியை தரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு நிறைந்து காணப்படும். வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருப்பது மிகவும் நல்லது. தெய்வ வழிபாடு மனநிம்மதியை தரும்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அற்புதமாக உள்ளது. வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் நாள். எந்த நாள் அமையப்போகின்றது. புதிய முயற்சிகள் அனைத்தும் அதிகாலையில் தொடங்குவது மிகவும் சிறப்பான பலனை தரும். சக ஊழியர்களுடன் அனுசரணையாக இருப்பது மிகவும் நல்லது. பண வரவு அதிகரிக்கும். செலவுகளை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. நீண்ட நாளாக எதிர்பார்த்த கடன் தொகை கைக்கு வந்து சேரும்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் உங்கள் சாமர்த்தியத்தால் எளிதில் சமாளித்து விடுவீர்கள். பேச்சில் நிதானம் தேவை. தந்தையின் உடல்நிலையில் அதிகம் கவனம் தேவை. செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி தரும் நாளாக அமையப் போகின்றது. நீங்கள் எடுக்கும் எந்த முயற்சிகளிலும் வெற்றி காண்பீர்கள். ஆடை ஆபரணங்களில் மிகுந்த ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு வரவேற்பு அதிகமாக இருக்கும். சொந்த தொழில் செய்வதில் நீங்கள் மிகவும் ஆர்வம் காட்டுவீர்கள். தாய் தந்தையின் ஆசீர்வாதம் மகிழ்ச்சியை தரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். எதிலும் வெற்றி காண்பீர்கள்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் பொறுமையாக இருப்பது நல்லது. வார்த்தையில் நிதானம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களுடன் அனுசரணையாக இருப்பது மிகவும் நல்லது. உடல்நிலையில் கவனம் தேவை. வியாபாரத்தில் அதிக லாபம் ஈட்டுவது கடினம். எனவே மனம் தளராமல் முயற்சி செய்வது பலனளிக்கும். கணவன் மனைவிக்கிடையே சில பிரச்சனைகள் வந்து நீங்கும். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செலவுகள் அதிகரிப்பதால் மனதில் சஞ்சலங்கள் ஏற்படும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளால் செலவுகள் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் வீண் விவாதங்கள் ஏற்படும். காரியத்தில் கவனமாக இருப்பது நல்லது. பணியில் மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருப்பது நல்லது.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தெய்வ வழிபாடு மிகவும் அவசியம். சக பணியாளர்களிடம் ஒற்றுமையாக இருப்பது மிகவும் நல்லது. தாய் தந்தை வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை நிலவும். பிள்ளைகளால் மன அமைதி உண்டாகும். பெரியோர்களை மதித்து நடப்பது மிகவும் நல்லது. புதிய முயற்சிகள் வெற்றி தரும். சுபநிகழ்ச்சிகள் ஏற்படக்கூடும்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. சிலருக்கு பிள்ளைகளால் வீண் விவாதங்கள் ஏற்படும். வெளிநாடு செல்லும். வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. வியாபாரம் மந்தமாக தான் இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் மகிழ்ச்சி அளிக்கும். மாணவர்களின் படிப்பு விஷயத்தில் கவனமாக இருப்பது மிகவும் நல்லது.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். மனதில் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்து காணப்படும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் லாபங்கள் ஏற்ற இறக்கமாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். பேச்சில் நிதானம் தேவை. குலதெய்வ வழிபாடு மகிழ்ச்சி உண்டாகும்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமாகவும் துணிச்சலாகவும் இருப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கை துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சுப செய்திகள் வெளி ஊரில் இருந்து வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் அதிகம் லாபம் ஈட்டுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அதிகரிக்கும். எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். செலவுகளை குறைத்து கொள்வது மிகவும் நல்லது.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குழப்பத்துடன் செயல்படுவீர்கள். குலதெய்வ வழிபாடு உங்களுக்கு மன நிம்மதியைத் தரும். பிள்ளைகளால் செலவுகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. பணம் வீண் விரயமாகும் நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் அனுசரணையாக இருப்பீர்கள். மனைவிவழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.