இன்றைய ராசி பலன் – 19-06-2021

rasi palan - 19-6-21
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைக்கும் விஷயங்கள் நினைத்தபடி நிறைவேறுவதில் தடை இருக்கும். கணவன் மனைவிக்குள் நடக்கும் சண்டை சச்சரவுகளை பற்றி மற்றவர்களிடம் விவாதிப்பதை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் இலாபம் கிடைக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உங்கள் உடனிருப்பவர்களே உங்களுக்கு எதிராக செயல்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை கவனம் தேவை. சுய தொழிலில் இருப்பவர்களுக்கு வெளி இடங்களில் விழிப்புணர்வு தேவை. உற்றார் உறவினர்களின் ஆதரவு குறையும். சுயதொழிலில் தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்தால் முன்னேற்றம் உண்டாகும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதிலிருக்கும் குழப்பங்கள் தீர்ந்து நிம்மதியான சூழல் உருவாகும். எந்த முடிவை எப்படி எடுக்க வேண்டும் என்கிற தெளிவு பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகம் பொறுமை தேவை. வீண் வம்புக்கு இருப்பவர்களை புறக்கணிப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்த ஒரு முடிவையும் எடுக்கும் முன்னர் சிந்தித்துச் செயலாற்றுவது நல்லது. எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும் என்கிற நம்பிக்கை பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்காத திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். கணவன் மனைவி உறவு சிக்கல் நீங்கும். ஆரோக்கியம் மேம்படலாம்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கக்கூடும். நீண்ட நாள் தடைபட்ட சில காரியம் நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பைப் பெற போராடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய சாதுர்யமான நடவடிக்கைகளால் முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தந்தைவழி உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம். ஆரோக்கியம் சிறக்கும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்காத நன்மைகள் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தடைப்பட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் இனிதே நடைபெறும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் படிப்படியான முன்னேற்றம் சீராகி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரிக்கும். ஊதிய உயர்வு உத்தியோக உயர்வு போன்ற விஷயங்களில் அனுகூலமற்ற பலன்கள் உண்டு.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சோர்வு நீங்கி புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். முகத்தில் ஒரு ஒளி வட்டம் தெரியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கொடுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்து முடித்து பாராட்டுகளை பெறுவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நம்பிக்கையானவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனைகள் பற்றி பேசி தீர்த்துக் கொள்வீர்கள். ஆரோக்கியம் கவனம் தேவை.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படுவதை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு முடிவையும் சிந்தித்து எடுப்பது நல்லது. அவசர முடிவுகள் ஆபத்தை கொடுக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகள் கைகொடுக்கும். பழைய பாக்கிகள் வசூல் ஆக வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கிய ரீதியான விஷயங்களில் கூடுதல் எச்சரிக்கை தேவை.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய கடுமையான முயற்சிகளுக்கு விஸ்வரூப வெற்றி கிடைக்கும். முயற்சி வீண் போவதில்லை என்பதை உணருவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனதில் உற்சாகம் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சுய முன்னேற்றம் இருக்கும். பல தடைகளையும் தாண்டி வெற்றியைக் காண்பீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைப்பது நடக்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பங்குதாரர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பண வரவு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கமாக செல்வது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது மன அமைதிக்கு வழிவகுக்கும். ஆரோக்கியம் சிறக்க கவனமுடனிருப்பது நல்லது

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெளியிட பயணங்களில் கவனமுடனிருப்பது நல்லது. தொலை தூர இடங்களில் இருந்து கிடைக்கக்கூடிய செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலை நீடிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய சிந்தனைகள் பிறக்கும். உங்கள் திறமைக்கு உரிய பாராட்டுகளையும், அங்கீகாரத்தையும் பெறுவீர்கள். ஆரோக்கியம் சிறக்கும்.

- Advertisement -