இன்றைய ராசி பலன் – 2-08-2020

rasi palan - 2-8-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபார ரீதியான வருமானம் பெருகும். வங்கி சேமிப்பு உயரக் கூடிய வாய்ப்புகள் அமையும். முன்பின் தெரியாதவர்களிடம் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை நிலவும். பெண்களுக்கு புதிய உத்வேகம் பெறக்கூடிய அற்புதமான நாளாக இருக்கும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு உடல்நலத்தில் அதிகம் அக்கறை செலுத்த வேண்டிய நாளாக இருக்கும். வயிறு மற்றும் உஷ்ண சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் அடிக்கடி ஏற்படும். பத்திரிகை துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். பைரவர் வழிபாடு செய்துவர நன்மைகள் உண்டாகும்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு தொழில்முறை போட்டிகள் குறைந்து முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரத்தில் இதுவரை இருந்த வந்த மந்தநிலை மாறும். கணவன் மனைவி இடையே புரிதல் உண்டாகும். மாணவர்கள் வெற்றி வாய்ப்பை தக்க வைக்க போராட வேண்டும். பெண்களுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு மன நிறைவுடன் இருக்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக லாபம் காணப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து எதிர்பார்த்த தொகை வந்து சேரும். விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு நல்ல நாளாக அமைந்துள்ளது. குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். பெண்கள் ஆடம்பரத்தை தவிர்த்து சிக்கனம் மேற்கொள்வது நல்லது. பொருளாதார சிக்கல்களை சுலபமாக எதிர் கொள்வீர்கள். மாணவர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் உண்டாகும்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு எதிலும் எச்சரிக்கையுடன் செயலாற்ற வேண்டிய நாளாக இருக்கும். உங்களுடைய ராசிக்கு அனுகூலமற்ற அமைப்பு என்பதால் எந்த ஒரு விஷயத்தையும் தீர்க்கமாக ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தில் சுபிட்சம் மேலோங்கும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று யோகமான நாளாக அமைய இருக்கிறது. ஒருமுறைக்கு இருமுறை நண்பர்களுடன் கலந்து கொண்டு புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து வங்கிக்கடன் கிடைக்கப்பெறும். வியாபாரம் செய்பவர்கள் லாபம் காண்பீர்கள்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் வெற்றியில் முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்றவை கிடைக்கப்பெறும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு லாபகரமான நாளாகவே இருக்கிறது. தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பல வகைகளில் இருந்தும் ஏற்றம் தரக்கூடிய அற்புதமான நாளாக இருப்பதால் மனம் நிகழ்வுகள் நடைபெறும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் குதூகலத்துடன் காணப்படுவீர்கள். மாணவர்கள் தங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பேச்சில் நிதானத்தையும் பொறுமையையும் கடைபிடிக்க வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் இருப்பவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி இடையே ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து செல்வது அமைதியை தரும்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு அனுகூலமற்ற அமைப்பு என்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான அவற்றில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் தொடர்பான வற்றில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் வெற்றி தரும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு தொட்டதெல்லாம் துலங்க கூடிய சிறப்பான அமைப்பு என்பதால் எந்த ஒரு விஷயத்தையும் தாராளமாக முன்னின்று நடத்திக் கொடுக்கலாம்.சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் நீங்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.