இன்றைய ராசி பலன் – 2-11-2020

rasi palan - 2-11-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. புதிய விடியலைக் காண புத்துணர்வோடு செயல்படக் கூடிய அற்புதமான அமைப்பு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைக்க பெறுவார்கள். தொழில் ரீதியான போட்டிகள் குறைந்து வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயரும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வருகின்ற தடைகளை எல்லாம் தகர்த்து எறிய கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனோதிடம் இயல்பாகவே உங்களுக்கு வந்துவிடும். திடீர் தனவரவு மகிழ்ச்சிகரமான விஷயங்களை செய்து விடும். தந்தைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டு.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. உங்களின் கிரக அமைப்பு சிறப்பாக இருப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அமோக வெற்றி கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகள் சிறப்பான லாபம் தரும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு ஏற்றமான நாளாக இருக்கும். குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் படிப்படியாக நீங்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவனமுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். தொழில் ரீதியான பயணங்களில் எச்சரிக்கை தேவை. குலதெய்வ வழிபாடு மன நிம்மதியை கொடுக்கும். பணம் சார்ந்த விஷயத்தில் எச்சரிக்கை தேவை. முதலீடு செய்யும் முன் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் தொட்டதெல்லாம் துலங்க கூடிய பொன்னான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை காரணமாக உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தேவையான ஓய்வு எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நான் எதிர்பார்த்ததை விட சிறப்பான லாபம் அமையும். இது வரை நிலுவையில் இருந்த கடன் தொகைகள் வசூலாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணம் சிறப்பாக அமையும்.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திருமணம் போன்ற சுப காரியங்கள் கை கூடி வரும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் அனுகூலமான பலன்கள் உண்டு. சகோதர சகோதரிகள் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல அமைப்பாக இருப்பதால் உங்களுடைய முழு ஒத்துழைப்புடன் முயற்சிகளை கொடுத்தால் சிறப்பான பலன்கள் உண்டு. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பது போல் இன்றைய நாள் உங்களுடைய நாளாக அமைய இருக்கிறது. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சாதக பலன் கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த அளவிற்கு வருமானம் இல்லை என்றாலும் பொருளாதார பிரச்சினைகளை சிறப்பாக சமாளிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான மந்த நிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு குறையும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பூர்விக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு. எடுக்கின்ற முயற்சிகளை காலதாமதம் ஆனாலும் வெற்றிகள் கிடைக்கும். சமுதாயத்தில் உங்களுக்கு இருக்கும் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கக் கூடிய நாளாக அமையும். உங்களுடைய நேர்மையான குணமும் வெற்றிக்கு காரணமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்றாலும் தடைகளை தகர்த்து விடுவீர்கள். பொருளாதார சரிவுகளை சமாளிக்க போராடுவீர்கள். உற்றால் மற்றும் உறவினர்களின் ஆதரவு இருக்கும். புதிய தொழில் முயற்சிகள் லாபம் தரும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் யார் நல்லவர்? யார் கெட்டவர்? என்பதை அறிந்து கொள்ள வாய்ப்புகள் உருவாகும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் அனுகூலமான பலன் உண்டு. வேலையில்லாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை கிடைக்கும். எதிர்பாராத புதுவரவு மகிழ்ச்சியைக் கொடுக்கும். வரவிற்கு ஏற்ற செலவு இருந்தாலும் பொருளாதாரத்தை சிறப்பாக நடத்துவீர்கள். ஆரோக்கிய ரீதியான செலவுகள் செய்ய நேரிடலாம்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -