இன்றைய ராசி பலன் – 2-4-2020

rasi palan - 2-4-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுகமான ஒரு நாளாக அமையும். இரும்புத் தொழில் கட்டிட தொழில் செய்பவர்களுக்கு இன்றைய நாளில் நல்ல லாபம் உண்டாகும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். புதிய தொழிலில் வெற்றி அடைவீர்கள். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். எதை செய்தாலும் நிதானமாக செய்வது மிகவும் நல்லது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி தரும் நாளாக அமையும். பெண்களால் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சமமான நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சற்று பிரச்சனைகள் வந்து நீங்கும். சுபகாரிய செய்திகள் மகிழ்ச்சியை உண்டாக்கும். சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சந்தோஷமான நாளாக அமையும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் நலன் நன்றாக இருந்து வரும். வரவு செலவு தொடர்பான தொழிலில் இருப்பவர்களுக்கு ஏற்றமிகு காலமாகும் நாளாக இருக்கும். உறவினர் விருந்துக்கு செல்வது போன்ற மகிழ்ச்சிகரமான செயல்பாடுகள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சற்று அழைத்தீர்கள் இருந்தாலும் வெற்றிகரமாக முடியும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகவே இருக்கும். கடன் எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு பலன் கிடைக்கும். குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றிய கவலை மனதை ஆட்கொள்ளும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல நாளாக அமையும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சிறிதளவு பற்றாக்குறை இருந்து வந்தாலும் நாளின் பிற்பகுதியில் தன வரவு உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களை ஆதாயம் கிடைக்கும். சமுதாயத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு மரியாதையும் கிடைக்கும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். குடும்பத்தில் வாக்குவாதத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது. பற்றாக்குறை இருந்து வந்தாலும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். அழகு சொல்லாமல் இருப்பது என்பதற்கு ஏற்ப ஒவ்வொரு பேச்சுக்கும் எதிர் பேச்சு பேசாமல் இருப்பது குடும்பத்தில் அமைதி காக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். பொறுமையைக் கைக் கொள்வது மிகவும் நல்லது.

- Advertisement -

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாக அமையும். ஆயிரம் கவலைகளும் கஷ்டங்களும் இருந்தாலும் நல்லதொரு தூக்கம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் லாபத்தை ஈட்டுகிறார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஒரு சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் வேலை நன்றாக செல்லும். பண வரவு உண்டு சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்பு உள்ளது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி தரும் நாளாக அமைய போகிறது. திருமண முயற்சிகள் மற்றும் சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும் அவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு சாதிப்பார்கள். இன்றைய இரவில் தூக்கம் நன்றாக கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும். புது தொழில் முயற்சிகள் வெற்றியடையும். உத்தியோக உயர்வு கானம் வழிமுறைகள் ஏற்படும். திருமணம் தொடர்பான சுப காரியங்கள் இனிதே நடைபெறும். சொத்து விற்பது மற்றும் வாங்குவது தொடர்பான வேலைகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் அக்கறை ஆக இருப்பது மிகவும் நல்லது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புது தொழில் முயற்சிகள் வெற்றியடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சற்று பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் வெற்றிகரமாக எதிர்கொண்டு சிறப்பாக முடிப்பார்கள். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மட்டும் சற்று இழுபறியாக செல்லும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சிறப்பானதொரு காலமாக அமையும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாக அமையும். நாளில் முற்பகுதியில் அலைச்சல்கள் அதிகமாகும். இருப்பினும் வெற்றிகரமாக எதிர்கொள்வீர்கள். தனவரவு உண்டு. தூர தேசங்களில் இருப்பவர்களுக்கு தாய்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். திருமண காரியங்கள் சுப காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சீராக இருந்து வரும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். தொழில் ரீதியாக நல்ல செய்திகள் வந்துசேரும். கடன் பிரச்சினையால் ஒரு சில மன வருத்தங்கள் ஏற்பட்டாலும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். மாணவர்களின் கல்வி நன்றாக இருந்து வரும். அவர்கள் கல்விக்காக எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களை சற்று காலதாமதமாக வாய்ப்புகள் உள்ளது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக ஆமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கக்கூடும். சிறிது அலைச்சல்கள் ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும். எதிர்பார்க்கும் கல்லூரிகளில் அல்லது உயர் கல்விக்கான இடங்கள் கிடைக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -