இன்றைய ராசி பலன் – 20-04-2018

12-rasi
- Advertisement -

மேஷம்:

Mesham Rasi
உற்சாகமான நாளாக அமையும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். கனிவான பேச்சால் மற்றவர்களைக் கவர்வீர்கள். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasi
பிற்பகலுக்குமேல் தாய் வழி உறவினர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். உங்கள் தேவை அறிந்து மற்றவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக இருக்கும். மாலை நேரத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் சிறு பிரச்னை ஏற்படக்கூடும்.

மிதுனம்:

midhunam
காலையில் அன்றாட பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கப்பெறுவீர்கள். மனம் உற்சாகமாகக் காணப்படும். நீண்டநாள்களாக நினைத்திருந்த குலதெய்வ பிரார்த்தனையை இன்று நிறைவேற்றுவீர்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

கடகம்:

- Advertisement -

Kadagam Rasi
அலுவலகத்தில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். மாலை நேரத்தில் சிறுவயது நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும். தேவையான பணம் எப்படியும் கிடைத்துவிடும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் நல்ல திருப்பம் ஏற்படக்கூடும்.

சிம்மம்:

simmam
தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வழக்கில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.

கன்னி:

- Advertisement -

Kanni Rasi
எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. மாலையில் நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பிற்பகலுக்குமேல் உற்சாகம் பிறக்கும். சிறிய அளவில் மன உளைச்சல் ஏற்படும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.

துலாம்:

Thulam Rasi
எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

விருச்சிகம்:

virichigam
இன்று நீங்கள் தொடங்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். பிற்பகலுக்குமேல் வாழ்க்கைத் துணை வழியில் ஆதரவும் ஆதாயமும் உண்டாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

தனுசு:

Dhanusu Rasi
காலைப் பொழுது உற்சாகமாக விடியும். மனதுக்கு இனிய சம்பவங்களைக் கேட்பீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும்.பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

மகரம்:

Magaram rasi
உங்களுடைய அனுபவப்பூர்வமான பேச்சால் மற்றவர்களுக்கு ஆறுதல் தருவீர்கள். காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். உங்கள் தேவை அறிந்து மற்றவர்கள் உதவுவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கும்பம்:

Kumbam Rasi
அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாகும். அன்றாடப் பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். மற்றவர்களுடன் வீண்மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.

மீனம்:

Meenam Rasi
முற்பகல் வரை காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் வைத்துக்கொள்ளவும். பணவரவும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

- Advertisement -