Rasi palan : இன்றைய ராசி பலன் – 20-04-2019

Rasi Palan
- Advertisement -

மேஷம்:
Mesham Rasi

உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். நண்பர்கள் மூலம் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் நன்மைகள் ஏற்படக்கூடும்.

ரிஷபம்:
Rishabam Rasi

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் இடமுண்டு. மாலையில் மனதுக்கு இனிய சம்பவங்கள் நடைபெறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.

- Advertisement -

மிதுனம்:
midhunam

புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வரும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

கடகம்:
Kadagam Rasi

இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். குடும்பப் பொறுப்புகளில் கூடுதல் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

- Advertisement -

சிம்மம்:
simmam

தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். பிற்பகலுக்குமேல் மனதில் இனம் புரியாத உற்சாகம் உண்டாகும். உத்திரம் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் ஆதாயமும் உண்டாகும்.

கன்னி:
Kanni Rasi

தாயின் அன்பும் ஆதரவும் சோர்ந்த மனதுக்கு உற்சாகம் தருவதாக அமையும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். கடவுளின் அருளால் சிலருக்குத் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகக்கூடும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi

மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிதாகத் தொடங்கும் காரியங்களை காலையிலேயே தொடங்குவது நல்லது. அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.

விருச்சிகம்:
virichigam

விருச்சிக ராசிக்கு இன்றைய ராசி பலன் படி கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

தனுசு:
Dhanusu Rasi

புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வரும். சகோதரர்களால் அனுகூலம் ஏற்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குச் சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

மகரம்:
Magaram rasi

எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். நீண்டநாளாக எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று கிடைக்கக்கூடும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சிறிய அளவில் ஆதாயம் கிடைக்கும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும். காரியங்களில் பொறுமை தேவை. எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

மீனம்:
meenam

தாய் வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பிற்பகலுக்குமேல் வீண் செலவுகள் உண்டாகும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் இறைவழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -