இன்றைய ராசி பலன் – 20-05-2018

12-rasigal

மேஷம்:

Mesham Rasiஎதிலும் உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். சில நேரங்களில் நிர்பந்தத்தின் பேரில் விருப்பமில்லாத வேலை செய்ய நேரலாம். வேலை மாறுதல் பற்றிய எண்ணம் உண்டாகும். புதிய சாதனை நிகழ்த்த வாய்ப்பு கிடைக்கும். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

ரிஷபம்:

Rishabam Rasiஇன்று குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். வாக்கு வன்மையால் எதுவும் சாதகமாக நடக்கும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர் பாராத திருப்பங்கள் ஏற்படும். பொறுப்பு அதிகரிப்பால் சிரமத்திற்கு ஆளாவீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனம்:

midhunamமனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். தொழில் ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும். இன்று உங்கள் வேலையில் பலம் என்னவென்றும் உங்கள் பலவீனம் என்னவென்றும் அறிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.

- Advertisement -

கடகம்:

Kadagam Rasiமனம் உற்சாகமாகக் காணப்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி தேடி வரும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குருவின் அருளால் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும்.

சிம்மம்:

simmamஉற்சாகமான நாளாக அமையும். எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். பணவரத்து தாமதப்படும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.

கன்னி:

Kanni Rasiமுயற்சிகளில் வெற்றியும் பணலாபமும் கிடைக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி தேடி வரும். மாலையில் உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலை தூக்கலாம். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

துலாம்:

Thulam Rasi புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது. வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். சிலருக்கு புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். திர்பாராத திடீர் செலவு ஏற்படும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சலும் செலவுகளும் ஏற்படக்கூடும்.

விருச்சிகம்:

virichigam உற்சாகமான நாளாக அமையும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எந்த காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டு செயல்படுவது நல்லது. அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் ஏற்படும்.

தனுசு:

Dhanusu Rasiஅரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். சுபநிகழ்ச்சிகள் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கவேண்டாம்.

வைகாசி மாத ராசி பலன்களை அறிய இங்கு கிளிக் செய்யவும்

மகரம்:

Magaram rasiமுயற்சிகளில் வெற்றியும் பணலாபமும் கிடைக்கும். மாலையில் உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு சண்டைகள் உண்டாகலாம். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டு.

கும்பம்:

Kumbam Rasiமனம் உற்சாகமாகக் காணப்படும். பிற்பகலுக்கு மேல் மனதில் உற்சாகம் ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.

மீனம்:

Meenam Rasiபணவரவு மகிழ்ச்சி தரும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் மேற்கொள்வது சாதகமாக முடியும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் சூழ்நிலை உருவாகும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க காரியங்களில் தடைகள் ஏற்படக்கூடும்.

இந்த நாளுக்குரிய ராசி பலன் எல்லோருக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.