Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (20/06/2019): தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படாது

Rasi Palan
- Advertisement -

மேஷம்:

இன்று எதிலும் பொறுமையும் சகிப்புத் தன்மையும் மிக அவசியம். அலுவலக வேலைகளில் மிகவும் கவனத்துடன் ஈடுபடவும். அநாவசிய செலவுகளால் சிலர் கடன் வாங்கவும் நேரும். வாழ்க்கைத் துணை உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு தருவார். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

- Advertisement -

ரிஷபம்:
Rishabam Rasi

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தேவையற்ற செலவுகள் எது வும் ஏற்படாது. மற்றவர்களுடன் வீண் விவாதங்களில் ஈடுபடவேண்டாம். பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

மிதுனம்:
midhunam

அதிகாரிகளின் சந்திப்பும், அவர்களால் காரிய அனுகூலமும் உண்டாகும். தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்கள், அவர்களுக்காக வீண் செலவுகளும் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது. அலுவலகத்தில் சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபாரம் எப்போதும்போல் நடைபெறும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் நன்மைகள் உண்டாகும்.

- Advertisement -

கடகம்:
Kadagam Rasi

இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். வெளியில் போகும்போது பொருட்கள் தொலைந்து போகக்கூடும் என்பதால் எச்சரிக்கை அவசியம். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.

சிம்மம்:
simmam

அனுகூலமான நாள். ஆனால்,புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பிற்பகலுக்கு மேல் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். சக வியாபாரிகளிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணங்கள் ஏற்படும்.

- Advertisement -

கன்னி:
Kanni Rasi

கன்னி ராசிக்கு இன்றைய ராசி பலன் படி மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்ட சிறுசிறு பிணக்குகள் மறைந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

துலாம்:
Thulam Rasi

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். தேவையான பணம் கிடைக்கும். சகோதரர்கள் வகையில் ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் பணிகளுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியங்கள் நிறைவேறும். பிற்பகலுக்குமேல் வெளியூரில் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் செய்தி வந்து சேரும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்:
virichigam

புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அரசாங்கக் காரியம் முடிவதில் தாமதம் உண்டாகும். மாலையில் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

தனுசு:
Dhanusu Rasi

மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிற்பகலுக்குமேல் வீண் செலவுகள் உண்டாகும். காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் வீண்மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம்:
Magaram rasi

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். சிலரால் மனதில் சிறு வருத்தமும் ஏற்பட வாய்ப்பு உண்டு. உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் சுறுசுறுப்பாக பணி செய்வீர்கள். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். வழக்கில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும். பிற்பகலுக்குமேல் தேவையற்ற அலைச்சல் ஏற்படும்.மாலையில் சிலருக்கு லேசான தலைவலி ஏற்படக்கூடும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

மீனம்:
meenam

உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. தாயின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் நன்மை உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -