இன்றைய ராசி பலன் – 20-08-2020

rasi palan - 20-8-2020
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல பலன்களை தரக்கூடிய நாளாகக் இருக்கும். குடும்பத்தினரிடையே அனுசரித்துப் போவது நன்மை தரும். நண்பர்கள் மூலம் வீண் விரயங்கள் ஏற்படும். பூர்வீக சொத்து பிரச்சினைகள் சாதகமாகும். முருகப் பெருமானை வழிபட்டு வர சங்கடங்கள் விலகும்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனசஞ்சலங்கள் நிறைந்த நாளாக அமைய வாய்ப்பு உண்டு. மாணவர்கள் புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். உடன்பிறப்புகள் வழியில் ஆதாயம் கிடைக்கும். தொழில் புரிவோருக்கு சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். நரசிம்மர் வழிபாடு நிறைவான இலாபத்தை ஏற்றுக் கொடுக்கும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல அனுகூலமான நாளாக அமையும். புது உத்வேகத்துடனும் தன்னம்பிக்கையோடும் காணப்படுகிறார்கள். அரசாங்கத் துறையில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் ஏற்பட வாய்ப்புண்டு. நவக்கிரக வழிபாடு நல்ல பலனை கொடுக்கும்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கடன் தொல்லைகள் நீங்கி மன நிம்மதி அளிக்கும் நாளாக அமையும். தொழில் புரிவோருக்கு மன சங்கடங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. எதிலும் நிதானத்தோடு செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மகாலட்சுமி வழிபட நல்ல பணவரவு கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியிட பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். வருமானம் இரட்டிப்பாகும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புத்துணர்ச்சி மிக்க நாளாக அமையும். பூர்வீக சொத்துப் பிரச்சனைகள் நீங்கி பணவரவு கிடைக்கும். திடீர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். உஷ்ண சம்பந்தமான பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. நண்பர்கள் வழியில் ஆதாயம் காண்பீர்கள். சிவபெருமானுக்கு வில்வம் மாலை சாற்றி வர மனக் கவலைகள் நீங்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முடிவுகள் நல்ல பலனைத் தரக்கூடிய நாளாக அமையும். மாணவர்கள் தங்களது துறைகளில் சிறந்து விளங்குவர். சுப நிகழ்ச்சிகள் கைகூடும். மனைவி வழியில் ஆதாயம் உண்டு. வாகன ஓட்டிகள் சற்று கவனம் தேவை. விநாயகப் பெருமானை வணங்குவது சிறப்பை உண்டாக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல சிறந்த நாளாக அமையும். சுப நிகழ்ச்சிகள் கைக்கூடி பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு. எந்த ஒரு காரியத்திலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பிள்ளை வகையில் செலவுகள் ஏற்படும். அம்மனுக்கு நெய் தீபமேற்றி வழிபட கவலைகள் விலகும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பு மிகுந்த நாளாக அமைய வாய்ப்பு உண்டு. அரசாங்கத் துறையில் பணிபுரிபவர்கள் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. உடன் பணிபுரியும் அலுவலர்கள் நல்ல ஒத்துழைப்பு தருவர். புதிய முடிவுகளை எடுப்பது தவிர்க்கவும். சனீஸ்வரனை வணங்கி வர சங்கடங்களை தவிர்க்கலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வாழ்வின் அடுத்தக் கட்ட முயற்சிகளை எடுக்க நல்ல ஒரு நாளாக அமையும். புதிய வேலை கிடைக்க சொத்துக்கள் வாங்க சிறந்த நாளாக அமையும். தந்தை வழியில் வீண் விரயம் ஏற்படும். பிறரிடம் பேசும் முன் யோசித்து பேச வேண்டும். அம்மனை வழிபடுவது பண பலத்தைக் கொடுக்கும்.

கும்பம்

கும்ப ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் சற்று சோர்வும், தளர்வும் நிறைந்த நாளாக அமையும். புதிய முயற்சிகளை முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவது மகிழ்ச்சி கொடுக்கும். ஆன்மிக பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு செய்து வர தொழிலில் சிறந்து விளங்குவீர்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தினரிடையே நல்ல அன்னியோன்னியத்தை உருவாக்கும் ஒரு சிறந்த நாளாக அமையும். பல நாட்களாக நீடித்து வந்த கடன்கள் தீரும். பொருளாதாரத்தில் சற்று ஏற்றத்தாழ்வு இருக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். ஆஞ்சநேயர் வழிபாடு சிறந்த எதிர்காலத்தை கொடுக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -