இன்றைய ராசி பலன் – 20-1-2020

rasi palan - 20-1-2020
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழ்நிலை உருவாகலாம். பயணங்களால் ஆதாயம் உண்டு. புதிய நண்பர்களால் புதிய மாற்றங்கள் ஏற்படலாம். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நல்ல நாளாக இருக்கும். மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் விருத்தி ஏற்படும். கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு நல்ல செய்திகள் கிட்டும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் வெற்றி காண்பீர்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். எடுக்கின்ற ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிட்டும். வெளிநாட்டிற்கு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கூடிய விரைவில் நல்ல செய்திகள் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் புதிய உத்திகளை கையாண்டு முன்னேற்றம் காண்பார்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு சண்டைகள் ஏற்படுவதற்கான சூழ்நிலை நிலவுகின்றன. எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். வழக்குகள் சாதகமாக அமையும். பெண்கள் இறை வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நாள் சிறப்பான நாளாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். பிள்ளைகளால் உள்ளம் மகிழும். வீண் விரயங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன. ஆடம்பரத்தை தவிர்த்து சிக்கனத்தைக் கடைபிடிப்பது நல்லது. நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். நீண்ட நாள் இழுத்துக் கொண்டிருந்த சில காரியங்கள் தாமதமின்றி நிறைவேறும். புதிய தொழில் முயற்சிகள் மேற்கொள்வோருக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். வெளிநாடு செல்ல முயற்சி மேற்கொள்வோருக்கு நன்மை உண்டாகும். மூன்றாம் நபர்களிடம் எச்சரிக்கை தேவை.

கடகம்:
கடக ராசிக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்கான இனிய நாளாக இருக்கும். எதிர்காலத்தைப் பற்றிய திட்டமிடல் மேலோங்கும். ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை தேவை. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உறவினர்களால் உள்ளம் மகிழும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வெளிநாடுகளில் வாசிப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். அந்த நாட்டிலேயே சொத்துக்கள் வாங்குவதற்கான யோகம் உண்டு. குழந்தைகளின் கல்வி விஷயத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே அன்பு நீடித்திருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பயணங்களில் எச்சரிக்கை தேவை.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் நல்ல பலன் கிட்டும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு. உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. திருமணம் போன்ற சுப செலவுகள் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்தவர்களால் மன மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர்வதற்கு நல்ல புதிய உத்திகளை கையாள்வதால் நல்ல பலன் காணலாம். கணவன்-மனைவி உறவு சிக்கல் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உயர்கல்வி பயில்வோர் தொழில்முறை பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும். பெண்களுக்கு தனவரவு உண்டாகும். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். வழக்கு தொடர்பான விஷயங்கள் தாமதப்படும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் கிடைப்பதற்கான யோகம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிட்டும். வீண் அலைச்சல் ஏற்பட்டு சோர்வுடன் காணப்படுவார்கள். பெற்றோர்களின் உடல் நலனில் அக்கறை தேவை. மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிரம்பி வழியும். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். எதிர்காலத்தைப் பற்றிய திட்டமிடல் மேலோங்கும். புதிய தொழில் முயற்சிகள் முன்னேற்றம் தரும். வியாபாரத்தில் விருத்தி உண்டாகும். குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும். சுபகாரியப் பேச்சுக்கள் வெற்றி அடையும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வெளிநாடு செல்லும் யோகம் ஒரு சிலருக்கு உண்டாகும். வாகன யோகம் ஒரு சிலருக்கு அமையப்பெறும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

விருச்சிகம்:விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாக இருக்கும். தொழில் சம்பந்தமாக புதிய முயற்சிகளை கையாளுவீர்கள். மனதுக்கு பிடித்தவார்களால் சில பிரச்சனைகள் உருவாகலாம். எச்சரிக்கை தேவை. வியாபாரம் தொடர்பான வெளியூர் செல்வதற்கான சூழ்நிலை உருவாகும். பயணங்களில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இன்றைய நாள் பாராட்டுக்குரிய நாளாக இருக்கும். சுபகாரியப் பேச்சுக்கள் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. வெளிநாடு வேலை வாய்ப்புக்காக காத்திருப்போருக்கு நற்செய்தி வரும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். பொருளாதார பற்றாக்குறையை திறம்பட சமாளிப்பீர்கள். நண்பர்களால் வம்பு சண்டைகள் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. எனவே எச்சரிக்கை தேவை. மனதிற்கு பிடித்தவர்களால் மன மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். மாணவர்களின் கல்வி நிலை உயரும். உயர் கல்வி பயில்வோருக்கு நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் விருத்தி உண்டாகும். சகோதர சகோதரிகளால் ஆதாயம் கிட்டும். கணவன் மனைவி உறவில் சிறு சிறு சிக்கல்கள் ஏற்படலாம். ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் நடைபெறும். உங்களின் கடின முயற்சிக்கு உரிய பலன்கள் கிட்டும். உங்களின் நீண்டநாள் கனவுகள் நிறைவேறுவதற்கான அடித்தளம் உண்டாகும். மாணவர்களின் கல்வியில் எச்சரிக்கை தேவை. குடும்ப நபர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எவரிடமும் கோபப்படாமல் பொறுமையை கடைப்பிடிப்பது சிறந்த நாளாக உண்டாக்கித் தரும். வாகன வகையில் செலவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. வேலை பளு காரணமாக சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகள் அமோகமாக வெற்றி பெறும். சமூகத்தின் மீது திடீர் அக்கறை ஏற்படுவதற்கான சூழ்நிலை உருவாகும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். திருமணம் போன்ற சுபகாரிய பேச்சுகள் நல்லபடியாக நடந்தேறும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் கிட்டும். ஜாமீன் கையெழுத்து போடுவதில் எச்சரிக்கை தேவை. குடும்ப விஷயங்களை முடிந்த வரை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. பைரவரை வழிபடுவதால் இன்றைய நாள் சிறப்பான நாளாக அமைய பெரும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு சிறு சிக்கல்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன. ஆரோக்கியம் சீராக இருக்கும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வழக்குகளில் வெற்றி கிட்டும். இறை வழிபாடுகளில் கவனம் செலுத்துவீர்கள்.

- Advertisement -