இன்றைய ராசி பலன் – 19-10-2019

Rasi Palan
- Advertisement -

மேஷம்:
meshamஉறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். எதிர்பார்க்கும் பணம் கைக்கு வரும். பிற்பகலுக்கு மேல் காரியங்களில் தடை தாமதங்கள் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பயணங்கள் செல்ல நேரிடும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

ரிஷபம்:
rishabamஇன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். ஒரு சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும் அதனால் நன்மையும் உண்டாகும். சிலருக்குக் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உண்டு.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் நன்மைகள் உண்டாகும்.

- Advertisement -

மிதுனம்:
midhunamமனதில் உற்சாகம் நிலவும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

கடகம்:
kadagamபுதிய முயற்சிகள் சாதகமாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். தேவையான பணம் கைக்குக் கிடைக்கும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பாராத ஆதாயம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் பேச்சில் கவனம் தேவை.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் புதிய ஆடை, ஆபரணயோகம் உண்டாகும்.

- Advertisement -

சிம்மம்:
simmamவெளியூர்களிலிருந்து சுபச் செய்திகள் வரும்.  மனம் உற்சாகமாகக் காணப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பிற்பகலுக்குமேல் புதிய காரியங்களில் ஈடுபட வேண்டாம்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும்.

கன்னி:
kanniகாலையில் புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவேண்டாம். வீட்டில் பராமரிப்புப் பணிகள் அதிகரிக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். பிற்பகலுக்கு மேல் சிலருக்கு எதிர்பாராத சந்திப்பு மகிழ்ச்சி தரும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நல்லவர்களின் நட்பும் அதனால் நன்மையும் உண்டாகும்.

- Advertisement -

துலாம்:
thulamஇன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. வெளியூர்களிலிருந்து நல்ல சுபச் செய்திகள் வரும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குலதெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும்.

விருச்சிகம்:
virichigamமுயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். வெளியில் செல்லும்போது பள்ளி, கல்லூரி கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.

தனுசு:
dhanusuஇன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். வெளியூர்களிலிருந்து எதிர்பாராத தகவல்கள் வரும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

மகரம்:
magaramகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பிற்பகலுக்குமேல் சிலருக்குச் சிறிய அளவில்  உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிகளில் சிறு தடைகள் ஏற்படும்.

கும்பம்:
kumbamபுதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. மாலையில் நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

மீனம்:
meenamஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக்கிடைக்கும். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் முழுவதையும் நமக்காக கணித்துக்கொடுத்தவர் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்

- Advertisement -