இன்றைய ராசி பலன் – 20-10-2020

rasi palan - 20-10-2020

மேஷம்
Mesham Rasiமேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியாளர்கள் உடன் சிறு சிறு மோதல்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான பொருளாதார சிக்கல்களை சமாளிக்க கடன் வாங்க நேரலாம். கூடுமானவரை தேவையில்லாத கடன்களை வாங்குவதை தவிர்க்கவும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை. உணவு கட்டுப்பாடு விஷயத்தில் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உடன் பணிபுரிபவர்கள் நல்ல முன்னேற்றமும், விருத்தியும் ஏற்படும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை அமையும் வாய்ப்புகள் உருவாகும்.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொட்டதெல்லாம் பொன்னாக கூடிய வாய்ப்புகள் உண்டு. எடுக்கும் முயற்சிகளில் அமோக வெற்றி பெறும். மற்றும் வியாபாரத்தில் சிறப்பான பணவரவு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் மன அமைதி பெற முடியும். பூர்வீக சொத்துக்கள் நல்ல பலன்கள் உண்டு..

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த விஷயங்கள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான ஒப்பந்த விஷயங்களில் ஒருமுறைக்கு பலமுறை யோசிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வரிகள் கொடுக்கும் தொந்தரவுகளை பொருத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது. அதிகம் பொறுமையுடன் இருங்கள் உங்களுக்கான காலம் வரும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத பண வரவு குடும்பத்தில் மகிழ்ச்சி படுத்தும். நிலுவையில் இருந்த பழைய பாக்கிகள் வசூலாகும் கூடிய வாய்ப்புகள் அமையும். தொழில்ரீதியான கொடுக்கல்-வாங்கல் அதிக லாபத்தை தரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை தக்க வைக்க போராட வேண்டியிருக்கும்.. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். பெண்களுக்கு நினைத்ததெல்லாம் நடக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனதிற்குப் பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் வரலாம். பிள்ளை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். இந்த வழிபாடுகளை மேற்கொள்வது மூலம் நன்மைகள் பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவும் கிடைக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் முன்னேற்றத்தை தரும்.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டமான நாளாக அமைய இருக்கிறது. எதிர்பார்க்கும் விஷயங்கள் எல்லாம் எதிர்பார்த்தபடியே நடைபெற இருப்பதால் உள்ளம் மகிழும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் இல்லை என்றாலும் பொருளாதாரத்தில் பிரச்சினைகள் இருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற விஷயங்களில் சாதகப் பலன்கள் உண்டாகும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய யோகம் உண்டாகும். ஒரு விஷயத்தில் நீங்கள் முடிவு செய்து வைத்திருப்பீர்கள். அது அப்படியே நடக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் இருப்பவர் களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளலாம். பெரியவர்களின். ஆசிர்வாதம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் அதிகம் பொறுமையுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கும். தொழில் ரீதியான விஷயங்களில் புதிய உத்திகளை கையாள்வது நல்லது.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் எச்சரிக்கை தேவை. நம்பியவர்களே உங்களை ஏமாற்றும் சந்தர்ப்பங்கள் உண்டு. கூடுமானவரை பண விஷயத்தில் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய விஷயங்களை நோக்கிய பயணங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. பெண்களுக்கு இறை வழிபாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை பளு அதிகரிப்பதால் சில உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் கைகூடிவரும். எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வீர்கள். பெண்கள் குழப்பத்துடன் இருந்த சில விஷயங்களில் தெளிவு பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற சிலர் பாடுபடுவீர்கள். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த விஷயத்தில் தோல்வியை சந்திக்கக்கூடும். இருந்தாலும் உங்களின் விடாமுயற்சியால் வெற்றி காண முடியும் என்கிற தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களுடைய பலமாக இருப்பவர்கள் முழு ஆதரவு கொடுப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உற்சாகத்துடன் இருக்கக்கூடிய அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் சில விஷயங்களை புதிதாக கையாளுவீர்கள்..

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றம் தரும் அமைப்பு என்பதால் புதிய விஷயங்களை துவங்குவதற்கு சாதகமான பலன்கள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டி பொறாமைகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கும். பொருளாதார ரீதியான முன்னேற்றத்தில் சிறப்பான பலன்கள் உண்டு. பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.