இன்றைய ராசி பலன் – 20-2-2020

rasi palan - 20-2-2020

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் தடையின்றி வெற்றி பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டு. வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. ஒரு சிலருக்கு பழைய நண்பர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகள் கிட்டும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பாராத மன சங்கடங்கள் ஏற்படலாம். கணவன் மனைவியிடையே சிறு சிறு சண்டை சச்சரவுகள் வரலாம் எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று என்ன நாள் ஏற்றகரமான நாளாக இருக்கும். எதையும் மன தைரியத்துடன் எதிர் கொள்ளும் நீங்கள் அறிவாற்றலால் எதிர்வரும் அனைத்தையும் சுலபமாக சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் இடத்தில் மரியாதை அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல தகவல் கிட்டும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நன்மைகள் உண்டாகும். மூட்டு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம் எனவே ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும்.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனினும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம். பொருளாதாரத்தில் பற்றாக்குறை இருப்பினும் திறம்பட சமாளித்து வெற்றி பெறுவீர்கள். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலம் உண்டாகும். சுபகாரியப் பேச்சுகள் வெற்றி தரும். வெளிநாட்டு வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு நல்ல தகவல் உண்டு.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் பொறுமையுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கும். உத்தியோகம் செய்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றில் காலதாமதம் ஏற்படலாம். வியாபாரம் செய்பவர்கள் வியாபாரத்தில் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. வியாபார விருத்திக்காக சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். கூட்டுத்தொழில் முயற்சிகள் பலன் தரும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்ப நபர்களை அனுசரித்து செல்வது நல்லது.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு காரணமாக சோர்வுடன் காணப்படுவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம். பொருளாதார நிலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். சம்பாதித்த பணம் முழுவதும் விரயம் ஆகிக்கொண்டே இருக்கும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் வெற்றி காண்பீர்கள். கண் பிரச்சனை, வயிறு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகமான நாளாக இருக்கும். உற்ற நண்பர்களின் ஆதரவு தகுந்த சமயத்தில் கட்டாயம் கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். பரிதாபம் அதிகமாக இருக்கும் உங்களுக்கு தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுவது போல் தோற்றமளித்தாலும் இறுதியில் மலை போல் வந்த பிரச்சினைகள் பனி போல் விலகுவது போல் விலகி விடும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். எதிர்பாராத பண வரவுகள் உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். மாணவர்களின் கல்வியில் சுமுகமான சூழ்நிலை காணப்படும். புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வம் செலுத்துவீர்கள்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சுமூகமான சூழ்நிலையில் இருப்பீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு செய்திகள் வந்து சேரும். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு தாய் நாட்டிலிருந்து சுபசெய்திகள் வரலாம். குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் உண்டு. ஆசிரியர்களினால் பாராட்டப்படுவீர்கள். ஒரு சிலருக்கு புதிய தொழில்நுட்பங்களை வாங்கிக் குவிக்கும் யோகம் அமையும்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். சகோதர, சகோதரிகள் வழியே சில மன சங்கடங்கள் உருவாகலாம் எனவே முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து கொள்வது நல்லது. உங்களின் கருத்துக்களுக்கு உங்களின் குடும்பம் முக்கியத்துவம் அளிக்கும். சமுதாய அந்தஸ்து அதிகரிக்கும். மாணவர்களின் கல்வியில் ஏற்றம் ஏற்படும். திருமணம் போன்ற சுபகாரிய பேச்சுகள் வெற்றி தரும்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீண் விரயங்களை சந்திக்க கூடிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். வியாபாரம் செய்பவர்களுக்கும் வீண் விரயங்கள் உண்டாகி மன இறுக்கத்தை தரும். தியானம், யோகா போன்றவற்றை மேற்கொள்வதன் மூலம் சிறப்பான பலன்களை காணலாம். குடும்ப நபர்கள் இடையே ஒற்றுமை தேவை. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுமுகமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். மாணவர்களின் கல்வியில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. சிந்தனைகளை அலைபாய விடாமல் கல்வியில் கவனம் செலுத்துவது பலன் தரும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஒரு முடிவை எடுக்கும் முன் பலமுறை ஆலோசித்த எடுப்பது நல்லது. சுயதொழில் புரியும் பெண்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும்.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அரச பணியாளர்கள் ஆதரவு கிட்டும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் புது புது விஷயங்களை செயல்படுத்த முற்படுவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிட்டும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியே நீங்கும். பிள்ளைகளின் கல்வியில் மற்றும் ஆரோக்கியத்தில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. எலும்பு தேய்மானம் தொடர்பான பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கையுடன் செயல்படும் நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கும் தைரியம் இருக்கும். குடும்பத்தின் ஆதரவு தன்னம்பிக்கை தரும். பெண்களுக்கு அதிக வேலைப்பளுவினால் சில பிரச்சினைகள் உண்டாகலாம். தேவையான ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் தடையின்றி வெற்றி தரும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.