இன்றைய ராசி பலன் – 20-4-2020

rasi palan - 20-4-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாக அமைய போகிறது. உத்தியோகத்தில் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்களின் கல்வித் திறன் பளிச்சிடும். சிலருக்கு பிரயாணம் செய்யக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர வாய்ப்புள்ளது. தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட பல உறவுகள் நெருங்குவதற்கான நல்ல நாளாக அமையும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய போகிறது. கூட்டுத் தொழில் முயற்சிகள் வெற்றியடையும். காதல் வயப்பட்டு இருப்பவர் வெற்றி அடைவார்கள். வீட்டில் உங்கள் காதல் சம்பந்தமாக பேச்சுவார்த்தைகள் நல்ல முறையில் நடந்து முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் தொழில் வாய்ப்புக்கள் போன்றவற்றை முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சிகரமாக நாளாக அமைய போகிறது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவது புதிய வேலை விண்ணப்பிப்பது போன்றவற்றை சற்று தள்ளி வைத்தால் நல்லது. கோபத்தை குறைத்து குணத்தை அதிகப்படுத்திக் கொள்ளவும். வேலை மாற்றத்தை நோக்கி இருப்பவர்களுக்கு சொந்தத்தொழில் செய்பவர்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டாலும் வெற்றி காண்பார்கள். குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக அமைய போகிறது. பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். ஒரு சிலர் கடனை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு பணம் கைக்கு வந்து சேரும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பெரியவர் உங்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகள் சற்று காலதாமதமாகும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அலைச்சல்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. சொந்த தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் சில பிரச்சனைகள் வந்து நீங்கும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போகலாம். கணவன் மனைவி ஒற்றுமையில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் வெற்றிகரமாக சமாளித்து விடுவீர்கள். குடும்ப அமைதி நிலை நாட்டுவார்கள். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும்.

- Advertisement -

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி தரும் நாளாக அமைய போகிறது. நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். தன வரவு உண்டாகும். உத்தியோகத்தின் ஆதாயம் கிடைக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் வெற்றி அடைவீர்கள். புதிய தொழில் வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். ஆடை ஆபரண சேர்க்கை போன்றவை உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. நண்பர்கள் உத்தியோகத்திலும் தொழில்துறையிலும் பெரிய அளவில் உதவியாக இருப்பார்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். சொந்த தொழில் செய்பவர்கள் ஏற்றம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இலக்கை அடைவீர்கள். சொத்துக்கள் விற்பது தொடர்பான காரியங்களில் வெற்றி அடைவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். மாணவர்களின் படிப்பில் குறியாக இருப்பது மிகவும் நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கோவிலுக்கு செல்லுதல், ஆன்மீக காரியங்களில் ஈடுபடுதல், வயதில் மூத்தவர்கள் சந்தித்தல் போன்றவைகள் நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி படிக்க வேண்டியது மிகவும் அவசியம். சொந்தத் தொழில் செய்பவர்கள் வெற்றி காணக்கூடிய நல்ல நாளாக அமையும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக அமைய போகிறது. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு வெற்றி உண்டாகும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி தருவதாக அமையும். வெளிநாட்டு வேலைவாய்ப்பை நோக்கி இருப்பவர்கள் பல புதிய வழிகளை காண்பீர்கள். உங்கள் வாழ்க்கையை முன்னேற்றப் பாதையை நோக்கி செல்லும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் லாபம் பெறுவார்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாக அமையும். நீங்கள் எதிர்பார்க்கின்ற பல காரியங்களில் வெற்றியை தேடித்தரும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியில் முடியும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு வாய்ப்புகள் உண்டாகும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமைகள் உண்டாகும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய நாளாக அமைய போகிறது. கோபத்தை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். குடும்ப ஒற்றுமை பிற்பகலுக்கு மேல் நன்றாக இருக்கும். பற்றாக்குறையை சமாளிக்க சிரமப்படுவீர்கள். கல்வி வாய்ப்புகளை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாகும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். கோவிலுக்கு செல்வதில் வீட்டில் உள்ள பெரியவர்கள் சந்தித்தல் குருமார்களை பார்த்தால் அவர்களுடைய ஆசிர்வாதம் பெறுதல் போன்றவை சிறப்பாக நடைபெறும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பற்றாக்குறையை சிறப்பாக சரி செய்வீர்கள். நீண்டநாள் எதிர்பார்த்த பொருளாதார வரவு உண்டு. உடல் நன்றாக இருந்து வரும். எதையும் சிந்தித்து செயல்படுவீர்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -