இன்றைய ராசி பலன் – 20-6-2020

rasi palan - 20-6-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உழைப்பால் உயரும் நாள். வீண் செலவுகள் அதிகரிக்கும். பிரிந்துபோன நண்பர்களை சந்திக்க நிகழும். தாயாருடன் வீண் வாக்குவாதம் ஏற்படக்கூடும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். உத்யோகத்தில் இன்று உங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வீண் செலவுகளை குறைப்பதன் மூலம் நெருக்கடிகளை தவிர்க்க முடியும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எடுக்கக் கூடிய சவால்களில் வெற்றி பெறுவீர்கள். கூடப்பிறந்தவர்கள் ஒற்றுமையை காட்டுவார்கள். அரசு உத்தியோகம் கைகூடும். நண்பர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் படிப்படியாக குறையும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். எடுத்த காரியத்தை தைரியமாக செய்து முடித்துக் காட்டுவீர்கள். வியாபாரத்தில் ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கி மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். கொடுத்தா பழைய கடன் தொகை கைக்கு வந்து சேரும். வியாபாரத்தில் புது முயற்சிகள் மேற்கொள்வதன் மூலம் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகம் வேலைச்சுமை ஏற்படக்கூடும். சொத்துக்கள் வாங்குவது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளால் பிரிந்துபோன உறவினர்கள் ஒன்று சேர வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமணம் தடை நீங்கும். மற்றவர்கள் கூறுவதை எளிதில் நம்பி ஏமாந்து விடுவீர்கள். வியாபாரத்தில் உள்ள ரகசியங்களை மற்றவர்களிடம் சொல்வதால் ஆபத்து உண்டாகும். குடும்பத்தில் எடுக்கும் முக்கிய முடிவுகளை பெரியவர்களின் ஆலோசனை அவசியம். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மற்றவர்களிடம் பேசும் பொழுது பொறுமையாக பேசுவது அவசியம்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தடைகள் தாண்டி முன்னேறும் நாள். எடுத்த செயலை விடாப்பிடியாக செய்து முடிப்பீர்கள். உறவினர்களால் ஏற்பட்ட மனஸ்தாபம் வந்து நீங்கும். பல நாள் காத்திருக்கும் அரசு உத்தியோகம் விரைவில் கைகூடும். உத்யோகத்தில் பிரச்சினைகள் வந்துபோகும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மதிப்பும் மரியாதையும் கூடும் நாள். எந்தவித பிரச்சனையும் எளிதில் சமாளித்து விடுவீர்கள். பெற்றோரிடம் ஏற்பட்ட மனஸ்தாபம் நீங்கி அவர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படும். குழந்தைகளின் படிப்பில் கவனம் தேவை. உத்யோகத்தில் புது முயற்சியால் மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் கையில் வந்து சேர்ந்தாலும் வீண் செலவுகள் அதிகரிக்கக் கூடும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல மாற்றங்கள் ஏற்படக்கூடும் நாளாகும். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். நண்பர்களால் மகிழ்ச்சி உண்டாகும். நீங்கள் செய்யும் செயலை கண்டு சிலர் உங்களிடம் முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்க கூடும். உத்தியோகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கக்கூடும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நாள். குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உருவாகும். எதிர்பார்த்த இடத்தில் பணம் வந்து சேரும். சொத்துக்கள் வாங்குவது விற்பது போன்ற வேலைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். ஆடை ஆபரணங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் வேலை அலைச்சல் அதிகரிக்கும். எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள் ஆகும். செலவுகள் அதிகரிக்கக் கூடும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு அதை பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேசுவது அவசியம். வியாபாரத்தில் நஷ்டங்கள் ஏற்படக்கூடும். நண்பர்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டு அது பிரச்சனையில் முடியக் கூடும்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் நாள். குழந்தைகளின் உடல் நலத்தில் அதிகம் அக்கறை தேவை. திருமணம் தடை நீங்கி கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவுக்கு வரும். எடுத்த காரியத்தை சவாலாக செய்து முடித்துக் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் வருமானம் உயர அதிக வாய்ப்புகள் உள்ளது. பூர்வீக சொத்துகள் அனைத்தும் முடிவுக்கு வரும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த இடத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கக்கூடும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் தொழிலாளர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும். வியாபாரத்தில் திடீர் யோகங்கள் கிடைக்கும். புதிய வாகனங்கள் வாங்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உத்யோகத்தில் புதிய முயற்சிகளால் ஆதரவு பெருகும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கனவுகள் நிறைவேறும் நாள். மற்றவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கக் கூடும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை. உங்கள் மனதில் இருக்கும் விஷயங்களை அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நண்பர்களும் ஏற்பட்ட சிறு சிறு பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். எடுத்த அனைத்து செயல்களிலும் வெற்றியைப் பெறுவீர்கள். குழந்தைகள் மூலம் பெருமை உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.