இன்றைய ராசி பலன் – 21-04-2018

12-rasi
- Advertisement -

மேஷம்:

Mesham Rasi
புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. இன்று உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasi
பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் நன்மை உண்டாகும்.

மிதுனம்:

Mithunam Rasi
ஒரு சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் இடமுண்டு. காரியங்களில் அனுகூலம் உண்டாகும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சியில் ஈடுபடுவதையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

கடகம்:

- Advertisement -

Kadagam Rasi
உற்சாகமான நாள். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவுக்கு வாய்ப்பு உண்டு.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் நன்மை உண்டாகும்.

சிம்மம்:

simmam
புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீட்டில் பராமரிப்புப் பணிகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும்.மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்கள் வகையில் ஆதாயம் ஏற்படக்கூடும்.

கன்னி:

- Advertisement -

Kanni Rasi
உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிற்பகலுக்குமேல் உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். இன்று வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும்.அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

துலாம்:

Thulam Rasi
சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த விஷயம் சாதகமாக முடியும். ஒரு சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும், அவர்களால் நன்மையும் உண்டாகும். எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

விருச்சிகம்:

Virichigam Rasiவெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வாழ்க்கைத்துணை வழியில் பணவரவு உண்டாகும். பிற்பகலுக்குமேல் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும்.

தனுசு:

Dhanusu Rasi
அத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு சிலர் கடன் வாங்கவும் நேரும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். வெளியூர்களில் இருந்து சுபச் செய்தி வரும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் வகையில் சிறு மனவருத்தம் உண்டாக வாய்ப்பு உண்டு என்பதால் பொறுமை மிக அவசியம். பூராடம்நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படக்கூடும்.

மகரம்:

Magaram rasi
வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். மனம் உற்சாகமாகக் காணப்படும். சிலருக்கு முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படக்கூடும்.

கும்பம்:

Kumbam Rasi
புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். காலையில் புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவேண்டாம்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

மீனம்:

Meenam Rasi
எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். உங்களின் அறிவார்ந்த பேச்சால் மற்றவர்களைக் கவர்வீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும்.

- Advertisement -