Rasi palan : இன்றைய ராசி பலன் – 21-04-2019

Rasi Palan
- Advertisement -

மேஷம்:
Mesham Rasi

அரசு அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. கார்த்திகை நட்சத்திரத்தில் வெளிநாடுகளில் இருந்து சுபச் செய்தி வரும்.

ரிஷபம்:
Rishabam Rasi

வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். வெளியூர்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். சகோதர வகையில் அனுகூலம் ஏற்படும். அதிகாரிகளின் சந்திப்பும் காரிய அனுகூலமும் உண்டாகும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

- Advertisement -

மிதுனம்:
midhunam

தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடு நீங்கும். சொத்து வகையில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். உற்சாகமான நாள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு.

கடகம்:
Kadagam Rasi

அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். மனதில் இனம் தெரியாத கலக்கம் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் அதிஷ்டானங்களை தரிசிக்கும் வாய்ப்பு அமையும்.

- Advertisement -

சிம்மம்:
simmam

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. வராது என்று நினைத்திருந்த கடன் தொகை வந்து சேரும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆலயங்களுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

கன்னி:
Kanni Rasi

அலுவலகத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். எதிர்பார்த்த நல்ல தகவல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வீடு, மனை வாங்க நினைத்த முயற்சிக்கு இன்று சாதகமான முடிவு ஏற்படும். பரபரப்பாகச் செயல்படுவீர்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi

பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும் என்பதால், மற்றவர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். பிற்பகலுக்குமேல் காரிய அனுகூலம் உண்டாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெண்களால் நன்மைகள் ஏற்படக்கூடும்.

விருச்சிகம்:
virichigam

அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். ஒரு சிலருக்கு புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். அதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும் ஏற்படும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கக்கூடும்.

தனுசு:
Dhanusu Rasi

தனுசு ராசிக்கு இன்றைய ராசி பலன் படி இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணத்தின்போது கவனமாக இருக்கவும்

மகரம்:
Magaram rasi

உற்சாகமான நாள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு.பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணங்கள் ஏற்படும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

காலையில் இருந்தே பரபரப்பாகக் காணப்படுவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கவும் நேரும் கணவன் – மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.

மீனம்:
meenam

உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைப்பது மகிழ்ச்சி தரும். உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். சிலருக்குப் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகக்கூடும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் அதிர்ஷ்டயோகம் உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -