இன்றைய ராசி பலன் – 21-1-2020

rasi palan - 21-1-2020

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிறைந்திருக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும். குடும்பத்தில் உள்ள நபர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியம் சீராக இருக்கும். பிரயாணங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. பயணங்களால் யோகமுண்டு. ஒரு சிலருக்கு வீடு மாற்றம் இடமாற்றம் போன்றவற்றை பற்றிய சிந்தனை இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய பேச்சுக்கள் வெற்றி அடையும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் தம்பதிகளுக்கு நல்ல செய்தி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சில சங்கடங்கள் உருவாகலாம். வியாபாரம் விருத்தி பெறும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பெண்களுக்கு ஆபரண சேர்க்கை உண்டாகும்.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் தாமதமானாலும் தடையின்றி வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களுடன் நட்புறவு பாராட்டுவது நல்லது. பெண்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். உயர்கல்வி பயில்வோர், வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்போருக்கு நற்செய்திகள் கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகள் முன்னேற்றப்பாதையில் செல்லும். வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு இனிய நாளாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன. ஒரு சிலருக்கு வீண் அலைச்சல்களால் மனச்சோர்வு உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே சண்டை சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை காணப்படும்.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய பேச்சுக்கள் வெற்றியடையும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். எதிர்பாராத பணவரவு திருப்திகரமாக இருக்கும். பெண்களுக்கு வாகன யோகம் கிடைக்கப்பெறும். கணவன்-மனைவி ஒற்றுமை நீடிக்கும். குடும்பத்தில் உள்ள நபர்களுடன் இனிமையான முறையில் உரையாடுவது நல்லது. வீண் விவாதங்களை தவிர்த்து பொறுமையை கடைபிடிக்க வேண்டியது அவசியமான ஒன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிம்மதி உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்காக எதிர்நோக்கி காத்திருப்போருக்கு நற்செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் விருத்தி உண்டாகும்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கணவன் மனைவி உறவுக்கு இடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படுவதற்கு உரிய வாய்ப்புகள் இருக்கிறது எனவே எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் புதிய நண்பர்கள் மூலம் புதிய வாய்ப்புகள் ஏற்படலாம். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். மனதிற்கு பிடித்தவர்களால் மன மகிழ்ச்சி உண்டாகும். பணவரவு எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். மாணவர்களின் கல்வி நிலை உயரும். உயர்கல்வி பயில்வோர் தொழில்முறை பயிற்சிகள் மேற்கொள்வீர்கள். வழக்குகள் சாதகமாக அமையும். விநாயகரை வழிபடுவது நல்லது.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். பொருளாதாரத்தில் பற்றாக்குறைகள் இருந்து வந்தாலும் திறம்பட சமாளித்து வெற்றி காண்பீர்கள். கடன் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கை தேவை. சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் வெற்றிகிட்டும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டு. வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு நற்செய்தி கிடைக்கும். நீண்ட நாட்களாக அவதிப்பட்டு கொண்டு இருந்த உடல் உபாதைகள் ஓரளவு சரியாகும். மாணவர்களின் கல்வி நிலை உயரும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் தாமதமானாலும் தடையின்றி வெற்றி பெறும். கணவன்-மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிட்டும். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். வியாபாரத்தில் கூட்டு முயற்சி பலனளிக்கும். சுய தொழில் செய்யும் பெண்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். வெளிநாடுகளில் கல்வி கற்போருக்கு நற்செய்திகள் கிட்டும். பொருளாதார பற்றாக்குறை ஏற்படலாம். வேலை பளு காரணமாக சோர்வுடன் காணப்படுவார்கள்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். தன வரவு திருப்திகரமாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் அமோகமாக வெற்றி பெறும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வெளிநாடு செல்வதற்காக திட்டமிட்டு இருப்பீர்கள். பயணங்களால் ஆதாயம் கிட்டும். சகோதர சகோதரிகளால் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன எனவே எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பாராட்டு மழை பொழியும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் தம்பதிகளுக்கு நற்செய்தி கிட்டும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த நாள் சிறப்பான நாளாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் தடையின்றி வெற்றி பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம். வியாபாரத்தில் வளர்ச்சியை காண்பீர்கள். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். புதிய தொழில் முயற்சிகள் பலன் தரும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கை தேவை. வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். உடல் நிலை கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. எச்சரிக்கை தேவை.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருப்போருக்கு மனதிற்கு பிடித்த வேலை அமையும். வீண் விரயங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன. சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்ப நபர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவி உறவுக்கு இடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு பின்பு அன்பு அதிகரிக்கும். பெற்றோர்கள் உடல்நலனில் கவனம் தேவை. பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உத்யோகத்தில் சிறுசிறு சங்கடங்கள் நேரலாம்.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கணவன் மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை காணப்படும். புதிய தொழில் முயற்சிகள் லாபகரமாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிம்மதி உண்டாகும். ஊதிய உயர்வு, இடமாற்றம் போன்றவை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உயர்கல்வி பயில்வோர் தொழில்முறை பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. எதிர்பாராத நபர்களால் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படலாம்.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகள் லாபகரமாக அமையப்பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக மனச்சோர்வு சோர்வுடன் காணப்படுவீர்கள். திடீர் உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம் எனவே எச்சரிக்கை தேவை. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் தள்ளிப்போடுவது நல்லது. பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் கிட்டும். கோபத்தைக் குறைத்துக் கொள்வதன் மூலம் இன்றைய நாளை சிறப்பாக்கி கொள்ளலாம். மூன்றாம் நபர்களிடமிருந்து எச்சரிக்கை தேவை. பொறுமையை கடைபிடிப்பது நல்லது. மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான யோகம் ஒரு சிலருக்கு அமையப் பெறும்.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. கூட்டுத் தொழில் புரிவோருக்கு நல்ல லாபகரமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். கணவன் மனைவி இடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன. வேலைவாய்ப்புக்காக காத்திருப்போருக்கு அனுகூலமான செய்திகள் உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படும் மனச்சோர்வு உண்டாகும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் கிட்டும்.