இன்றைய ராசி பலன் – 21-12-2020

rasi palan - 21-12-2020

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததை நடத்திக் காட்டக்கூடிய தன்னம்பிக்கை உங்களுக்கு அதிகரித்து காணப்படும். உங்களால் முடியாது என்று கூறிய காரியம் கூட எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் பெரிதாக பிரச்சினைகள் இருக்காது.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் நல்ல லாபம் காண்பீர்கள். வியாபார ரீதியான பயணங்களை சற்று எச்சரிக்கை தேவை. பெண்களுக்கு மனோதிடம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் தொந்தரவுகள் அதிகரிக்கும். தொழில்முறை போட்டி பொறாமைகள் குறையும். வங்கி சேமிப்பு உயர்வதற்கான வாய்ப்புகள் உண்டு. நீண்ட நாள் நண்பர் ஒருவரை சந்திக்க கூடிய வாய்ப்புகள் உண்டு.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் அமையும். சுபகாரிய முயற்சிகளில் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு மோதல்கள் ஏற்பட்டு மறையும்.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகம் தரும் அமைப்பாக இருந்தாலும் சவால்களையும் எதிர் கொள்வீர்கள். திடீர் பணவரவு குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய உதவியாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும் படைக்கப்படும். தொழில் ரீதியான விஷயங்களில் புதிய சவால்களை எதிர்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்க கூடிய நாளாக அமையும். சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். சுய தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பதில் சிக்கல்கள் நிலவும்.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக அமையாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியிடங்களுக்கு செல்லும் பயணங்கள் தொடர்பான விஷயம் அனுகூல பலன் கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய நட்பு உருவாகும். பெண்களுக்கு மனதில் ஒருவிதமான சஞ்சலம் இருக்கும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பாதியில் நின்று கொண்டிருக்கும் வேலைகளில் கவனம் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். விலகிச் சென்றவர்கள் அவர்களே வலிய வந்து பேசுவதற்கான வாய்ப்புகள் உண்டு. பெண்களுக்கு புதிய பாதைகள் புலப்படும்.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய சிந்தனைகள் எதிர்மறையாக அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் இதுவரை உங்களை புரிந்து கொள்ளாதவர்கள் இனி புரிந்துக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். கணவன் மனைவி இடையே கோபதாபங்களை தவிர்ப்பது உத்தமம். பிள்ளைகள் மூலம் நன்மைகள் நடைபெறும்.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர் வரும் பிரச்சனைகளை துணிச்சலுடன் எதிர்த்துப் போராடுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் கவர சில உத்திகளை மேற்கொள்வீர்கள். பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக அமையும்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நீண்ட நாட்களாக தீட்டிய திட்டங்கள் யாவும் நடைமுறைப்படுத்தக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில் இருந்து வந்த இடையூறுகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வேலை ஆட்களை சேர்ப்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதிற்கு பிடித்தவர்களை சந்திக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. இதுவரை உங்களுக்கு நிலவி வந்த சொத்து மற்றும் வாழ்க்கை பிரச்சனைகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்க கூடிய யோகம் உண்டாகும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் தேவையில்லாத அலைச்சல்களை சந்திக்கலாம். எனினும் வெற்றி அடைய கூடிய வாய்ப்புகள் உண்டு.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

உங்கள் ராசிக்கான 2021 புத்தாண்டு பலன்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்