இன்றைய ராசி பலன் – 21-04-2021

rasi palan - 21-4-21
- Advertisement -

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் புது முயற்சிகள் சாதக பலன்களை கொடுக்கும். வாகன பயணங்களின் பொழுது கவனம் தேவை.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்களை சந்திக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி கிடைக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களுடைய பலவீனத்தை தெரிந்து கொள்வீர்கள்.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இறை வழிபாடுகளில் அதிகம் ஆர்வம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. குலதெய்வ வழிபாடு செய்துவர நன்மைகள் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை நீடிக்கும்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் பொறுமை காப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்டகால கனவுகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும் வாய்ப்புகள் உருவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஒருசிலருக்கு தோல்விகள் ஏற்படும் என்பதால் எச்சரிக்கை தேவை.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் வெற்றியைக் காண்பீர்கள். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீண்ட நெடிய போராட்டங்கள் முடிவுக்கு வரும். ஆரோக்கியம் சீராக இருக்க உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது நல்லது.

கன்னி:
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தீராத கவலை தீர கூடிய அற்புதமான நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஏற்றம் காணலாம். உத்தியோகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் உங்களுடைய மதிப்பு உயரும்.

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத பிரச்சினைகளில் இருந்து விடுபடுவது நல்லது. உத்தியோகத்தில் கவன சிதறல் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைப்பதால் இடையூறுகள் ஏற்படும்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் ஒரு முறைக்கு இரு முறை ஆலோசனை செய்து விட்டு முடிவெடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

தனுசு:
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி புதிதாக உணர்வீர்கள். உங்களுடன் இருக்கும் நண்பர்களின் ஒத்துழைப்பும் சீராக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையான ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் முன்னேற்றம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு கீழ் பணி புரிபவர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது மூலம் முன்னேற்றம் காணலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சலுகைகள் கிடைப்பதில் பிரச்சனைகள் ஏற்படும்.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருக்கும் நபர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்களை காணலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். ஆரோக்கியத்தில் எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத மனக் கவலைகள் அகலும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய முதலீடுகள் செய்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம். உத்யோகத்தில் இருப்பவர்கள் சோர்வுடன் காணப்படுவார்கள்.

- Advertisement -