இன்றைய ராசி பலன் – 21-4-2020

rasi palan - 21-4-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி தரும் நாளாகவே இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் காண்பார்கள். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது ஆதாயம் உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்குவதற்கான அமைப்புகளும் உள்ளது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு இனிமையான நாளாக இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுக்கு சற்று உடல் நலம் பாதிக்கப்படுவதாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது விற்பது போன்றவற்றில் ஆதாயம் உண்டாகும். கல்வி நிலை மேம்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தன வரவு உண்டாகும் வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை நன்றாகவே இருக்கும். மாணவர்களின் படிப்பில் கவனமாக இருப்பது மிகவும் நல்லது.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் அமைதி தவழும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாகவே இருந்து வரும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டவர்களுக்கு உங்கள் திருமணத்தை பற்றி பெரியவர்களுடன் கலந்து பேசுவதற்கு நல்ல நாளாக அமையும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக நீங்கள் எடுக்கும் பல முயற்சிகள் வெற்றியடையும். உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு போன்றவற்றை எதிர்பார்ப்பதற்கு சற்று காலதாமதம் ஆகும். பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் நிர்வாகத்தின் நல்ல பெயர் வாங்குவீர்கள். கணவன் மனைவியிடையே அன்பு நிறைந்து காணப்படும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய நாளாகும். வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். உறவினர்களால் செலவுகள் அதிகரிக்கக் கூடும்.

- Advertisement -

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அலைச்சல்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருந்து வரும். உயர் கல்வி படிப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை காண்பீர்கள். தந்தையிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். தாயின் உடல்நிலையில் கவனமாக இருப்பது மிகவும் நல்லது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீண் அலைச்சல்களை தவிர்த்துக் கொள்ளலாம். உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்குள் சில வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். கல்வியை முடித்து வேலை தேடுபவர்கள் நல்ல தகவல் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமையாக இருப்பீர்கள். குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். ஒரு சிலர் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செய்யகளில் ஈடுபடுவீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருப்பது மிகவும் நல்லது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சில பிரச்சனைகள் வந்து நீங்கும். எதிர்பார்த்த காரியங்கள் வெற்றியடையும். கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை அடைவீர்கள். குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். வியாபாரத்தில் சில பிரச்சனைகள் வந்து நீங்கும். எதையும் சமாளிக்கும் திறன் வாய்ந்தவர்கள். படிப்பை முடித்து வேலை வாய்ப்புகள் வெளிநாடுகளில் நல்ல செய்திகள் வந்துசேரும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுப செலவுகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும். கணவன் மனைவி ஒற்றுமையாக இருக்கும். வேளையில் மனநிம்மதி கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு ஒரு சில பொருளாதார பிரச்சனைகள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். வீடு மற்றும் வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி தரும் நாளாக இருக்கும் நீங்கள் எதிர்பார்க்கும் காரியங்கள் வெற்றியடையும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் கலந்துகொள்வீர்கள். சொத்துக்கள் வாங்குவது வீடு கட்டுவது போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கும் முன்னேற்றமாக அமையும். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருப்பது மிகவும் நல்லது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று மன சஞ்சலம் ஆக இருக்கக் கூடும். எதை செய்தாலும் ஆலோசித்து செய்வது மிகவும் நல்லது. எடுத்த காரியங்களில் வெற்றி அடைவீர்கள். பெரியோர்களை மதித்து நடப்பதன் மூலம் வெற்றி கிடைக்கும். தாய் தந்தையின் உடல்நிலையில் அக்கறையாக இருப்பது மிகவும் நல்லது. குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டவர். நீங்கள் எதை செய்தாலும் பயனளிக்கக் கூடிய விஷயங்களை செய்யக்கூடியவர். தெய்வ வழிபாடு செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். நீங்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவும் மனப்பான்மை கொண்டவர்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -